இலங்கை ஜனநாயக சோஷலிசக் குடியரசின் ஏழாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக கோட்டாய ராஜபக்ஷ சற்றுமுன்னர் பதவிப் பிரமாணம் செய்துக் கொண்டார்.
இந்த பதவிப் பிரமாண நிகழ்வு அனுராதபுரம் ருவான்வெலிசாய மண்டபத்தில் இடம்பெற்று வருகிறது.
இந்நிலையில், இன்னும் சற்று நேரத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ருவான்வெலி மண்டபத்தில் இருந்து இந்நாட்டு மக்களுக்கு உரையாற்றவுள்ளார்.
இந் நிகழ்வில் சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியும், எதிர்கட்சி தலைவருமான மகிந்த ராஜபக்ஸ உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டுள்ளனர்.
1981 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பது தொடர்பான சட்டத்தின் 56 ஆவது சரத்தின் கீழ் கோட்டாய ராஜபக்ஷ இலங்கை ஜனநாயக சோஷலிசக் குடியரசின் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டு வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது.
தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவின் கைச்சாத்துடன் குறித்த வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கையின் ஏழாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியை தெரிவு செய்தற்காக இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில் நூற்றுக்கு 52.25 சதவீத வாக்குகளை பெற்று கோட்டாபய ராஜபக்ஷ வெற்றிப் பெற்றிருந்தமை குறிப்பிடப்பட்டுள்ளது.
அவரை எதிர்த்து போட்டியிட்ட சஜித் பிரேமதா 41.99 சதவீத வாக்குகளை பெற்றிருந்தார்.
இலங்கை ஜனநாயக சோஷலிசக் குடியரசின் ஏழாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக கோட்டாய ராஜபக்ஷ பதவிப் பிரமாணம் செய்துக் கொள்ளும் நிகழ்வு சற்றுமுன் ஆரம்பமானது.
இந்த பதவிப் பிரமாண நிகழ்வு அனுராதபுரம் ருவான்வெலிசாய மண்டபத்தில் ஆரம்பமாகியுள்ளது.
கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக பதவிப் பிரமாணம் செய்துக் கொண்ட பின்னர் ருவான்வெலிசாய மண்டபத்தில் இருந்து இந்நாட்டு மக்களுக்கு உரையாற்றவுள்ளார்.
இந் நிகழ்வில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியும், எதிர்கட்சி தலைவருமான மகிந்த ராஜபக்ஸ உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டுள்ளனர்.
பொதுத்தேர்தல் ஒன்றை நடத்துவது குறித்து கலந்துரையாட இன்று (18) பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் விசேட கூட்டம் ஒன்று இடம்பெறவுள்ளது.
இந்த கூட்டத்தில் கலந்துக்கொள்ளுமாறு சபாநாயகர் கரு ஜயசூரிய மற்றும் கட்சித் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் உறுப்பினர்களுடனும் இது குறித்து கலந்துரையாட எதிர்பார்ப்பதாகவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.
விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டு பிரதமர் இது குறித்து தெளிவுபடுத்தியுள்ளார்.
அதேபோல் எழாவது நிறைவேற்றதிகார ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள கோட்டாபய ராஜபக்ஸவுக்கும் பிரதமர் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
இதேவேளை ஐக்கிய தேசிய கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களின் குழு கூட்டமும் இன்று பிற்பகல் இடம்பெறவுள்ளதாக நவீன் திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசிய கட்சி முழுமையாக மறுசீரமைக்கப்பட வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேக்க தெரிவித்துள்ளார்.
குறிப்பாக கட்சித் தலைவரின் எண்ணங்களிலும் மாற்றங்கள் உருவாக வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.
கொழும்பில் ஊடகங்களுக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை கூறினார்.
மக்கள் வழங்கியுள்ள ஆணையை ஏற்று அதற்கு ஏற்றால் போல் தனது எதிர்கால நடவடிக்கைகள் அமையும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.