வரி ஏய்ப்பு வழக்கில் பிரபல திரைப்பட தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவுக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பித்து எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வருமானத்தை மறைத்து வரி ஏய்ப்பு செய்ததாக ஞானவேல் ராஜா மீது சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் வருமானவரித்துறை சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் சாட்சிகள் விசாரணை முடிந்து, கேள்விகளை கேட்டு குற்றச்சாட்டுகளை பதிவு செய்யும் நடைமுறைக்காக ஞானவேல் ராஜா ஆஜராக உத்தரவிடப்பட்டிருந்தது.
ஆனால் பலமுறை வாய்ப்பளித்தும் ஆஜராகாததால், அவருக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பிக்க வேண்டும் என வருமானவரித் துறை தரப்பு வழக்கறிஞர் கோரிக்கை விடுத்தார். அதனை ஏற்று பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்ட நீதிபதி, வழக்கை நவம்பர் 27ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.