சிறிலங்காவில் இப்போது நடைபெற்ற பரபரப்பான மாற்றங்களின் தொகுப்பு..!

ஜனாதிபதி செயலணியில் கடமையாற்றும் உத்தியோகத்தர்களின் எண்ணிக்கையை 500 ஆக குறைக்குமாறு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தனது செயலாளரான பி.பி. ஜெயசுந்தரவிற்கு உத்தரவிட்டுள்ளார்.

தற்போது ஜனாதிபதி செயலணியில் சுமார் 2500 பேர் வரை கடமையாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

——

ஜனாதிபதி செயலணியில் கடமையாற்றும் உத்தியோகத்தர்களின் எண்ணிக்கையை 500 ஆக குறைக்குமாறு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தனது செயலாளரான பி.பி. ஜெயசுந்தரவிற்கு உத்தரவிட்டுள்ளார்.

தற்போது ஜனாதிபதி செயலணியில் சுமார் 2500 பேர் வரை கடமையாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

——

அனைத்து ஆளுனர்களையும் பதவி விலகுமாறு ஜனாதிபதி செயலகம்உத்தரவு விடுத்துள்ளத. நேற்று புதன்கிழமை ஜனாதிபதி செயலகத்தினால் அனைத்து ஆளுனர்களுக்கும் பதவி விலகுமாறு அறிவுறுத்திய உத்தியோகபூர்வ கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இவ்விடயம் தொடர்பில் முன்னாள் ஆளுனர் கலாநிதி சுரேன் ராகவன் தெளிவுபடுத்துகையில்,

13 ஆவது அரசியலமைப்பு திருத்த்தின் படி ஜனாதிபதி தனது விருப்புக்கும் எண்ணத்திற்கும் ஏற்ப ஆளுனர்களை நியமிப்பார். ஆளுனர்களின் பதவி காலம் ஐந்து வருடங்களாக வரையறுக்கப்பட்டுள்ள போதிலும் அவர்களை நியமித்த ஜனாதிபதி பதவியிலிருந்து விலகும் போது குறித்த ஆளுனர்களும் இயல்பாகவே பதவி விலகியவர்களாகக் கருதப்படுவர்.

எனினும் புதிய ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ பதவி பிரமாணம் செய்து கொண்டவுடனேயே நாம் பதவி விலகினால் அவரை நாம் புறக்கணிப்பதைப் போன்றாகிவிடும். எனவே தான் பதவி விலகுவது தொடர்பில் ஆளுனர்கள் யாரும் தீர்மானமெதுவும் எடுக்கவில்லை.

இந்நிலையில் நேற்று புதன்கிழமை ஜனாதிபதி செயலகத்தினால் எம் அனைவருக்கும் பதவி விலகுமாறு கோரி உத்தியோகபூர்வ கடிதம் மின்னஞ்சல் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது. அதற்கமைய நான் என்னுடைய பதவி விலகல் கடிதத்தை ஜனாதிபதி செயலகத்திற்கு அனுப்பி வைத்துள்ளேன்.

ஏனைய மாகாண ஆளுனர்கள் சிலர் இது தொடர்பில் கலந்துரையாடினர். தொடர்ந்து ஒன்பது மாகாணங்களுக்கும் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவால் புதிய ஆளுனர்கள் நியமிக்கப்படுவார்கள் என்று குறிப்பிட்டார்.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் நியமிக்கப்பட்ட மத்திய மாகாண கீர்த்தி தென்னகோன், கிழக்கு ஆளுனர் ஷான் விஜேலால் டி சில்வா, வட மாகாண ஆளுனர் கலாநிதி சுரேன் ராகவன், வடமேல் மாகாண ஆளுனர் பேஷால ஜயரத்ன, வடமத்திய மாகாண ஆளுனர் சரத் ஏக்கநாயக்க, சப்ரகமுவ மாகாண ஆளுனர் தம்ம திஸாநாயக்க, தென் மாகாண ஆளுனர் ஹேமால் குணசேகர, ஊவா ஆளுனர் மைத்திரி குணரத்தின மற்றும் மேல் மாகாண ஆளுனர் ஏ.ஜே.எம்.முஸ்ஸம்மில் ஆகியோருக்கே இவ்வாறு பதவி விலகுமாறு கோரி கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

——

நாட்டில் சிங்கள பௌத்தத்திற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பதாக எதிரணியினரால் மாயை ஒன்று உருவாக்கப்பட்டு, அதனூடாக அவர்கள் தேர்தலில் வெற்றியடைந்திருக்கிறார்கள். ஆனால் இனவாதத்தை முன்நிறுத்தி நாட்டில் தொடர்ந்தும் சிறந்த ஆட்சியொன்றை முன்னெடுக்க முடியாது என்பதை நினைவில்கொள்ள வேண்டும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள பாராளுமன்ற உறுப்பினர் ஹரீன் பெர்னாண்டோவில் இல்லத்தில் இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

——–

ஓய்வூப்பெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணரத்த இன்று (20) பாதுகாப்புச் செயலாளராக தனது கடமைகளை பொறுப்பேற்றுள்ளார்.

இன்று காலை 9.15 மணியளவில் பாதுகாப்பு அமைச்சில் அவர் தனது கடமைகளை ஆரம்பித்துள்ளார்.

பாதுகாப்பு அமைச்சின் புதிய செயலாளராக மேஜர் ஜெனரல் கமல் குணரத்னவை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நேற்று (19) நியமித்தார்.

அவர் 1982 ஆம் ஆண்டு டிசம்பர் 4 ஆம் திகதி 2 வது லெப்டினனனாக இலங்கை இராணுவத்தில் இணைந்துக் கொண்டார்.

இராணுவத்தில் பல பதவிகளை வகித்துள்ள அவர் இறுதிப் போரின் போது இராணுவத்தின் 53 ஆவது படையணிக்கு தலைமை தாங்கி வழிநடத்தி இருந்தார்.

2016 ஆம் ஆண்டு இராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்ற அவர் பிரேசிலுக்கான இலங்கை தூதுவராகவும் கடமையாற்றினார்.
—–
இன்று (20) நள்ளிரவு முதல் தற்காலிகமாக 450 கிராம் பாணின் விலை 5 ரூபாவால் அதிகரிக்கப்படுவதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இன்று காலை இடம்பெற்ற ஊடகவியளாலர் சந்திப்பின் போதே இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே ஜயவர்தன இவ்வாறு தெரிவித்துள்ளார்.

கோதுமை மாவின் விலை அதிகரிக்கப்பட்ட காரணத்தினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

பாணின் விலை மட்டுமே அதிகரிக்கப்படுவதாகவும் ஏனைய சிறிய உணவுப் பொருட்களின் விலையில் மாற்றம் இல்லை எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts