எதிர்க்கட்சித் தலைவர் பதவி யாருக்கு என்பது தொடர்பில் ஐக்கிய தேசிய கட்சிக்குள் குழப்பம் நிலவி வருகின்றது.
ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்கவை, எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்குமாறு கோரி சபாநாயகருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
அக்கட்சியின் செயலாளர் நாயகம், அகில விராஜ் காரியவசமினால் எழுத்தப்பட்டுள்ள இக்கடிதம் பாராளுமன்றத்தில் சபாநாயகரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அகில விராஜ் கரியவாசம் தெரிவித்தார்.
இதேவேளை, சஜித் பிரேமதாஸவுக்கே எதிர்க்கட்சித் தலைவர் பதவியை வழங்க வேண்டும் என தெரிவித்து, ஐ.தே.க. உறுப்பினர்கள் 45 பேர் கையொப்பமிட்ட கடிதமொன்றை சபாநாயகருக்கு கையளித்துள்ளனர்.