டெலோவின் பொதுச் செயலாளர் எஸ்.சிறிகாந்தா உள்ளிட்ட கட்சியின் மூன்று சிரேஸ்ட உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க உள்ளதாக கட்சியின் தலைவர் செல்வம் அடைகலநாதன் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் கட்சி எடுத்த ஏகோபித்த தீர்மானத்திற்கு எதிராக செயற்பட்டதால் அவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணை மேற்கொள்ள கட்சியின் மத்திய செயற்குழு தீர்மானித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த ஜனாதிபதி தேர்தலில் டெலோ சஜித் பிரேமதாசவை ஆதரிக்க முடிவெடுத்திருந்த நிலையில் அதனை மீறி கட்சியின் பொதுச் செயலாளர் எஸ்.சிறிகாந்தா, கட்சியின் யாழ்.மாவட்ட செயலாளர் மற்றும் ஜனாதிபதி தேர்தலில் சுயாதீன வேட்பாளராக போட்டியிட்ட எம்.கே.சிவாஜிலிங்கத்திற்கு ஆதரவளித்திருந்தார்.
அதன் மூலம் அவர் கட்சியின் ஏகோபித்த தீர்மானத்திற்கு எதிராக செயற்பட்டுள்ளதாகவும் எனவே அவருக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணை நடத்த உள்ளதாக செல்வம் அடைகலநாதன் மேலும் தெரிவித்துள்ளார்.