ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவை எதிர்க்கட்சி தலைவராக ஏற்றுக்கொள்வதாக சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.
தனது ட்விற்றர் கணக்கில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற சம்பிரதாயங்களுக்கு அமையவும், அதனை மீறாத வகையிலும் நல்லாட்சிக்கான ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவை எதிர்க்கட்சி தலைவராக ஏற்றுக்கொள்வதாக, சபாநாயகர் கரு ஜயசூரிய அதில் தெரிவித்துள்ளார்.
அத்துடன், கட்சியின் உள்விவகாரங்களை கட்சிக்குள்ளேயே தீர்த்துக்கொள்வது சிறந்தது என அவர் அதில் சுட்டிக்காட்டியுள்ளார்.