மனித வாழ்வை பறித்தெடுக்க அல்லது மனித வாழ்வை மிதித்து செயற்பட எந்தவொரு சக்திக்கும் இடமளிக்க முடியாது என பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.
வருடாந்தம் இராணுவத்தினர் நடத்தும் நத்தார் கெரோல் கீத நிகழ்வு நேற்று மாலை நெலும் பொக்குன கலையரங்கில் நடைப்பெற்றது.
இங்கு உரையாற்றும் போதே அவர் இதனை கூறினார்.
நிகழ்வில் தொடர்ந்தும் உரையாற்றிய அவர் சகல இன மக்களுக்கும் கௌரவமிக்க வாழ்வை கொண்டு நடத்தக்கூடிய சூழலை ஏற்படுத்தியமைக்காக முப்படையினருக்கு நன்றி தெரிவிப்பதாக தெரிவித்தார்.
மனித வாழ்வை பாதுகாப்பதற்காக அர்ப்பணிப்புடன் செயலாற்றுவதாகவும், பிழை செய்யபவர்களிலும் நல்லவர்களை பாதுகாப்பது அவசியம் எனவும் அவர் கூறினார்.
உயிரை அர்ப்பணித்து ஏனைய உயர்களை பாதுகாப்பது என்பது ஒரு போராட்டம் என தெரிவித்த அவர் அவ்வாறான அர்பணிப்பை செய்பவர்களுக்கு நன்றி தெரிவிப்பது அவசியம் எனவும் தெரிவித்துள்ளார்.
அனைவருக்கும் சுயகௌரவத்துடன் வாழக்கூடிய சந்தர்ப்பத்தை ஏற்படுத்தி கொடுத்தமைக்காக முப்படையினருக்கு நன்றி தெரிவிக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வழி தவறி சென்ற ஒரு குழுவின் தன்னிச்சையான செயற்பாடு காரணமாக உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடத்தப்பட்டதுடன், அதன் மூலம் பல உயிர்களை இழந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
உயிர்களை காப்பாற்ற அர்பணிப்பு மற்றும் தியாகம் என்பன அவசியமாவதுடன் ஆகவே அவ்வாறான உயிர்களை பறிக்க எவருக்கும் இடமளிக்க போவது இல்லை எனவும் அவர் கூறினார்.