தேவ அன்பின் அடையாளங்கள் 2
சகோதரன். பிரான்சீஸ் அந்தோனிப்பிள்ளை.
ரெகொபோத் ஊழியங்கள் – டென்மார்க்கிற்காக பிரார்த்திப்போம்.
தேவன்தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவசிக்கிறவன் எவனோ, அவன் கெட்டுப்போகாமல், நித்திய ஜீவனை அடையும்படிக்கு அவரைத் தந்தருளி இவ்வளவாய் அன்புர்கூந்தார். (புதிய மொழிபெயர்ப்பு: அழிந்துபோகமல் நித்திய வாழ்வை அடையும்படிக்கு) யோவான் 3:16.
தேவ அன்பின் அடையாளங்களை இந்த கிறிஸ்மஸ் காலங்களில் நாம் அறிந்து கொள்வோம். இதனை விளங்கிக் கொள்ளும்படியாக நடந்த ஓர் சம்பவத்தை முதலில் விபரிக்கிறேன்.
ஒருமலை அடிவாரத்தை ஒட்டியபாதை அருகே ஒருசாக்குமூடை இருந்தது. வழிப்போக்கன் ஒருவன் வாகனத்தில் இருந்து மூட்டை விழுந்து விட்டது என நினைத்து பேராசையினால் அதனை தூக்கி எடுத்தான். அதற்குள் இருந்த கரடி அவனைப் பிடித்துக்கொண்டது. அவன் அதனை விட்டுவிட பலமுறை முயன்றும், அவனால் அதனிடத்தில் இருந்துவிடுபட முடியாமல் இறுதியில் மாண்டு போனான்.
இப்படியே பாவமும் பொல்லாதது என்பதை சிந்தித்துப் பார்க்கத் தவறி பாவத்தின் அகோரப்பிடியில் அகப்பட்டுத் தவிப்போர் இன்றும் எத்தனைபேர் இருக்கின்றார்கள்.
அவர்களும் கிறிஸ்மஸ்தினத்தில் ஆலயத்திற்கு செல்வதோடு மட்டுமல்ல கிறிஸ்மஸ்சையும் கொண்டாடுகிறார்கள். அப்படியான மக்களாக நாம் இருக்கக் கூடாது என்பதற்காக தேவனிடம் மன்றாடுவோம்.
பிரியமான நேயர்களே, இப்படியான நிலைமை நமக்கு வரக்கூடாது என்பதற்காகவே கிறிஸ்து நமக்காகப் பிறந்தார். அன்று இயேசுகிறிஸ்து பிறந்தபோது, இவர் யார்? இவர் என்ன செய்யப்போகிறார்? இவரைக்குறித்து தேவதூதர்கள் என்ன பாடினார்கள்? இவை யாவும் அவர்களுக்கு கேள்விக் குறியாக இருந்தது. இன்று நமக்கோ அவர் யார் என்று தெரியும். அவருடைய வருகையின் நோக்கம் என்ன என்பதுவும் தெரியும். அவர் மனுவாய் வந்தநோக்கத்தை நிறைவேற்றியதாலே நாம் அடைந்த விடுதலை ஒன்றே தேவனின் விடுதலை அளிக்கும் அன்புக்கு போதுமானதாக இன்று உள்ளது.
விடுதலையளிக்கும் அன்பு.
தேவன் எவர்களை முன்னறிந்தாரோ அவர்களை தமது குமாரனுடைய சாயலுக்கு ஒப்பாயிருப்பதற்கு முன்குறித்திருக்கிறார். ரோமர் 8:29
தேவனுக்குப் பிரியமான பிள்ளைகளே, பாவம் மனித வர்க்கத்தையே ஆட்டிப் படைக்கிறது என்பதை தேவனும் அறிவார். ஆனால் தேவனால் படைக்கப்பட்ட மக்கள் பாவத்தோடு மாண்டுபோக வேண்டுமென அவர் நினைப்பதுவுமில்லை, விரும்புவதுவுமில்லை. அதனால் மகாஇரக்கமுள்ள தேவன் ஏதேன் தோட்டத்தில் அந்த மீட்பின் பணியை ஆரம்பித்து அவர் தொடர்ந்து கிரியை செய்தார். தேவனுடைய வார்த்தை கூறுகிறபடி எல்லோரும் பாவம்செய்து தேவமகிமை அற்றவாகளாக இருக்கிறோம். அப்படிப்பட்ட நமக்கு தேவனிடத்தில் பாவமன்னிப்பும் விடுதலையும் உண்டு.
ஆம், அன்பானவர்களே. நமக்குள் பாவம் இருந்தாலும், அதனை உணர்ந்து, உணர்வது மட்டுமன்றி அதனை அறிக்கையிட்டால் தேவன் அப்பாவத்தை மன்னிப்பதோடு, நமக்கு பாவத்தில் இருந்து விடுதலையைத் தந்து அதன் விளைவுகளையும் தலைகீழாக மாற்றிப்போட வல்லவராக இருக்கிறார். அத்துடன் நமக்கு அருளிய வாக்குத்தத்தங்களையும் அவர் நிறைவேற்றுவார். ஏன் தெரியுமா? அவர் கடவுள். சர்வ வல்மையுள்ள தேவன். அவர் என்றும் மாறாதவர். அவர் மகா இரக்கமும் உருக்கமும் நிறைந்த தேவன். அன்பே உருவான தேவன்.
அதனாற்தான் பாவம் நிறைந்த இவ்வுலகில் சிக்கிமாண்டு போகாமல் தேவன்தாமே மனுக்குலத்தைத் தேடிவந்து, சிலுவை மரணத்தின்மூலம் பாவத்திற்கு விடுதலையைத் தந்து நமக்குத் தம்முடன் உறவை ஏற்படுத்தித்தந்துள்ளார். அப்படியானால் நாம் இனி ஏன் பயத்துடன் வாழவேண்டும்? பாவத்தின் விளைவால் பின்தொடர்ந்த பயத்தைநீக்கி விடுதலையாக்கியுள்ள தேவனை அண்டிவாழ்வதே நமது கடiமாகும்.
தேவனுக்குப் பிரியமான பிள்ளைகளே, என்றும்போல இம்முறையும் கிறிஸ்மஸ் வந்திருக்கன்றது என்று சோர்ந்து போயிருக்கின்றாயா? உன்வாழ்வின் பலவித பிரட்சனைகள் நிமித்தமாக பாவத்தின் பயத்தினால் சிறைபிடிக்கப்பட்ருக்கின்றாயா? அல்லது எப்படி விடுதலை அடைந்து கொள்வது என்று உள்மனதிலே வேதனைப் பட்டுக் கொண்டிருக்கிறாயா?
ஆண்டவர் உன்னைத்தான் தேடிவந்தார். உன் பயமெல்லாவற்றையும் நீக்கி, உனக்கு விடுதலையைத்தந்து, உன்னை தன்பிள்ளையாக ஏற்றுக் கொண்டிருக்கிறார். நீ இவ்வுலக வாழ்விலும், மறுவுலக வாழ்விலும் தனித்தவன் அல்ல. உனக்கு ஒரு விடுதலை நாயகன் உண்டு. உனக்கு ஒரு பரலோககுடும்பம் ஒன்று உண்டு. நீ சந்தோசமாக உன்னைத்தேடி வந்து உனக்கு விடுதலையைத்தந்தவரை உன் உள்ளத்தில் ஏற்றுக்கொண்டு அவரின் பிறப்பைக் கொண்டாடலாம். தேவ அன்பு மிகுந்த ஆச்சரியமானது. பாவியாகிய நம்மையே தம்புத்திரராக ஏற்றுக்கொண்ட அன்பு அது. அந்த அன்பான ஆண்டவரின் பிறப்பைக் கொண்டாடுவோம்.
அன்பின் பரலோகபிதாவே, உம்முடைய விடுதலை அளிக்கும் அன்பைப்பற்றி அறிய உதவியதற்காக நன்றி அப்பா. நீர் என்னைத் தேடிவந்து விடுத லையைத்தந்தது மில்லாமல், உமது பிள்ளையாகவும் ஏற்றுக்கொண்டீர். அந்த அன்பை நினைத்து எப்பொழுதும் வாழ உதவி செய்து என்னைக் காத்துவழி நடத்தும்படியாக மிகத்தாழ்மையுடன் வேண்டி நிற்கிறேன் நல்ல பிதாவே, ஆமென்.
கர்த்தர் உங்கள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக.
கிறிஸ்மஸ் சந்தோசம் ஒருநாளில் அல்ல. ஒருநபரில் இருந்து வருகிறது. அவர்தான் இயேசுகிறிஸ்து. உள்ளத்தில் இயேசு பிறக்காதவரை கிறிஸ்துவின்
பிறப்பு அர்த்தமற்றதாக இருக்கும்.