வடக்கில் தற்போது தீவிரமடைந்துள்ள சட்டவிரோத மணல் அகழ்வுகளை உடனடியாக தடுக்க வேண்டுமென அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, அமைச்சர் எஸ்.எம். சந்திரசேனவுக்கு அவசர கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளார்.
மணல் ஏற்றிச் செல்வதற்கான வீதி அனுமதிப் பத்திரங்களை இரத்துச் செய்யும் அமைச்சரவையின் தற்காலிக தீர்மானத்தை துஷ்பிரயோகம் செய்து, மக்களின் இயல்பு வாழ்கைக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் செயற்படுவோரின் செயற்பாடுகள் உடனடியாக தடுத்து நிறுத்தப்பட வேண்டுமென கடற்றொழில் நீரியல்வள அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அனுமதிப் பத்திரம் இரத்துச் செய்யப்பட்டமையினால் வட பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற துஷ்பிரயோக நடவடிக்கை தொடர்பாக காணி அபிவிருத்தி, சுற்றாடல் மற்றும் வன ஜீவராசிகள் அமைச்சர் எஸ்.எம். சந்திரசேனவிற்கு அவசர கடிதம் ஒன்றை எழுதியுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, வட பகுதியில் அனுமதி அளிக்கப்படாத இடங்களில் மணல் அகழப்படுவதை உடனடியாக நிறுத்த நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் கேட்டுக் கொண்டார்.
மணல் அகழ்வு தொடர்பில் தென் பகுதிக்கும் வட பகுதிக்கும் இடையில் வித்தியாசங்கள் இருப்பதைச் சுட்டிக் காட்டியுள்ள அமைச்சர், வடக்கு மாகாணத்தில் பரவலாக மணல் திட்டுக்கள் காணப்படுவதால், வீதி அனுமதி இரத்தானது.