நேற்றிரவு வௌியான 2019 உயர்தர பரீட்சை பெறுபேறுகளுக்கு அமைய தேசிய ரீதியில் முதலிடங்களை பெற்றவர்களின் விபரங்கள்:
அதன்படி, கொழும்பு ஆனந்த கல்லூரியின் மாணவர் தருச சிஹான் பொன்சேகா கணிதப் பிரிவில் (புதிய பாடத்திட்டம்) முதல் இடத்தை தனதாக்கியுள்ளார்.
கலை பிரிவில் (புதிய பாடத்திட்டம்) கொழும்பு தேவி மகளீர் பாடசாலையை சேர்ந்த தேசானி வெலிகமகே முதலிடத்தை தனதாக்கியுள்ளார்.
அதேபோல், கம்பஹா பண்டாரநாயக்க கல்லூரியை சேர்ந்த நிபுன விராஜ் தேசிய ரீதியில் கலைப்பிரிவில் (பழைய பாடத்திட்டம்) முதல் இடத்தை பெற்றுள்ளார்.
பதுளை மத்திய மகா வித்தியாலயத்தின் உவிந்து பிரவீன் சுமனசேகர கணிதப் பிரிவில் (புதிய பாடத்திட்டம்) இரண்டாம் இடத்தை பெற்றுள்ளார்.
மேலும், பின்னவல தேசிய பாடசாலையின் மாணவர் ஏ.தர்ஷன இசுருசிறி சம்பத் கணிதப்பிரிவில் (பழைய பாடத்திட்டம்) முதலிடத்தை பெற்றுள்ளார்.
பொறியியல் தொழிநுட்ப பிரிவில் (புதிய பாடத்திட்டம்) கம்பஹா பண்டாரநாயக்க கல்லூரியின் வினுர ஓசத முதலிடத்தை பெற்றுள்ளார்.
அதேபோல், உயிரியல் விஞ்ஞான பிரிவில் கொழும்பு விசாக வித்தியாலயத்தின் சச்சினி விஜேவர்தன முதலிடத்தை பெற்றுள்ளார்.
பெறுபேறுகளுக்கு அமைய ஒரு லட்சத்து 81 ஆயிரத்து 126 பரீட்சார்த்திகள் பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன் 71 பரீட்சார்த்திகளின் பெறுபேறுகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் பரீட்சை பெறுபேறுகள் தொடர்பான மீள்பரிசீலனை விண்ணப்பங்களை ஜனவரி மாதம் 17 ஆம் திகதிக்கு முன்னர் விண்ணப்பிக்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.