புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததும் முன்னெடுக்கப்படும் முதலாவது முதலீட்டுத் திட்டத்திற்காக பெரனியல் ரியல் எஸ்டேன் ஹோல்டிங்ஸ் நிறுவனம் தயாராக உள்ளது.
கொழும்பு பாலதக்ஷ மாவத்தையில் பேர வாவி மற்றும் சங்ரில்லா ஹோட்டலுக்கு இடையில் அமைந்துள்ள மூன்று ஏக்கர் நிலப்பரப்பில் இந்த முதலீடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த 250 மில்லியன் அமெரிக்க டொலர் வௌிநாட்டு முதலீட்டு திட்டத்தில் 30 மாடிகளை கொண்ட வணிக கோபுரம் ஒன்றை நிர்மாணிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ள நிலையில், 700 குடியிருப்புக்களும் நிர்மாணிக்கப்படவுள்ளது.
மேலும், சில்லரை விற்பனை நிலையம் மற்றும் உணவகங்களுக்காகவும் கட்டிடத்தினுள் வசதிகள் உண்டு.
இது தொடர்பான அமைச்சரவை பத்திரம் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் கடந்த தினம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்ட நிலையில் அதற்கு அனுமதி கிடைத்திருந்தது.
விரைவில் இந்த முதலீட்டு வேலைத்திட்டம் தொடர்பிலான உடன்படிக்கை கைச்சாத்து மற்றும் திட்டத்திற்கான குறித்த நிலப்பரப்பு குத்தகை அடிப்படையில் பெற்றுக் கொடுக்கப்படவுள்ள நிலையில், இதன்போது குத்தகை வாடகையாக 43 மில்லியன் அமெரிக்க டொலர் இலங்கை அரசுக்கு கிடைக்கவுள்ளது.