சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடந்து வருகிறது. குஷ்பு மகள் அனந்திதாவும் படப்பிடிப்புக்கு சென்று ரஜினியை சந்தித்து புகைப்படம் எடுத்து ஆட்டோகிராப் வாங்கி உள்ளார்.
சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத் ராமோஜிராவ் திரைப்பட நகரில் நடந்து வருகிறது. இதில் குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ் ஆகிய 3 கதாநாயகிகள் நடிக்கின்றனர். ரஜினிகாந்த் 2 பெண்டாட்டிக்காரர் கதாபாத்திரத்தில் வருகிறார் என்றும், குஷ்புவும், மீனாவும் மனைவிகளாக நடிக்கின்றனர் என்றும் கூறப்பட்டது.
குஷ்பு வில்லி வேடத்தில் நடிக்கிறார் என்று இன்னொரு தகவலும் வெளியானது. இவற்றை படக்குழுவினர் உறுதிப்படுத்தவில்லை. சிறந்த நடிகைக்கான தேசிய விருது பெற்ற கீர்த்தி சுரேசுக்கு படப்பிடிப்பு தளத்தில் ரஜினிகாந்த் பூங்கொத்து கொடுத்து வாழ்த்திய புகைப்படம் வலைத்தளத்தில் பரவியது.
இந்த நிலையில் குஷ்பு மகள் அனந்திதாவும் படப்பிடிப்புக்கு சென்று ரஜினியை சந்தித்து புகைப்படம் எடுத்து ஆட்டோகிராப் வாங்கி உள்ளார். இந்த புகைப்படமும் வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
இதுகுறித்து குஷ்பு தனது டுவிட்டர் பக்கத்தில், “எனது இளைய மகளின் கனவு நிறைவேறி விட்டது. எனது மகளை சந்திக்க நேரம் ஒதுக்கி ஆசிர்வதித்த ரஜினிக்கு நன்றி. உங்கள் எளிமையை பார்த்து அவள் வியந்தாள்” என்று பதிவிட்டுள்ளார். அனந்திதாவும் ரஜினியுடன் எடுத்த புகைப்படம் மற்றும் ஆட்டோகிராப்பை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளார்.
ரஜினியின் தர்பார் திரைப்படம் வருகிற 9-ந்தேதி வெளியாகிறது. விரைவில் படத்தை தணிக்கைக்கு அனுப்ப உள்ளனர்.