பாராளுமன்ற உறுப்பினர் சமல் ராஜபக்ஷ எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் சுயாதீன வேட்பாளராக கட்டுப்பணம் செலுத்தியுள்ளார். முன்னாள் சபாநாயகரான சமல் ராஜபக்ஷ, எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவின் மூத்த சகோதரராவார். ஸ்ரீ லங்கா சுதந்திர பொதுஜன கூட்டமைப்பு (‘ஸ்ரீ லங்கா நிதஹஸ் பொதுஜன சந்தானய’) சார்பான வேட்பாளராக அவருக்காக கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இன்றைய தினம் (04) சஜித் பிரேமதாஸவுக்கான கட்டுப்பணம் செலுத்தப்பட்டதோடு, தேசிய மக்கள் கட்சி சார்பில் மகேஷ் சேனாநாயக்கவுக்கும் கட்டுப்பணம் செலுத்தப்பட்டது. இதேவேளை முன்னாள் பிரதியமைச்சர் பஷீர் சேகுதாவூத், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஐ.எம். இல்யாஸ் ஆகியோருக்கான ஜனாதிபதித் தேர்தலுக்கான கட்டுப்பணம், சுயேச்சை வேட்பாளர்களாக செலுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது. ரஜீவ விஜேசிங்க, குமார வெல்கம, ஆகியோரும் சுயேச்சை வேட்பாளராக கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர். முன்னிலை சோசலிச கட்சி சார்பில் துமிந்த நாகமுவ, சிங்களஜாதிக…
Year: 2019
சுபவேளை பார்த்து வேட்புமனுவில் கையொப்பமிட்டார் கோட்டாபய
ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுண (SLPP) தலைமையிலான கூட்டு எதிர்க்கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபக ராஜபக்ஷ இன்று (06) காலை தனக்கான வேட்புமனு விண்ணப்பத்தில் கையெழுத்திட்டார். ஏற்கனவே பார்க்கப்பட்ட சுப வேளையான முற்பகல் 9.46 மணிக்கு மிரிஹானவில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து கையெழுத்திட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இச்சந்தர்ப்பத்தில் ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுணவில் அங்கம் வகிக்கும் பாராளுமன்ற உறுப்பினர்கள் பிரசன்னமாகியிருந்ததோடு, ஶ்ரீ லங்கா சுதந்திர பொதுஜன கூட்டமைப்பு சார்பில் கட்டுப்பணம் செலுத்திய, கோட்டாபயவின் மூத்த சகோதரரான சமல் ராஜபக்ஷவும் பிரசன்னமாகியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. எதிர்வரும் நவம்பர் 16 ஆம் திகதி இடம்பெறவுள்ள 8ஆவது ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் நாளை (07) மு.ப. 9.00 மணி முதல் 11.00 மணி வரை தேர்தல்கள் செயலகத்தில் ஏற்றுக்கொள்ளப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.