இலங்கையில் சிங்கள மொழியில் மாத்திரம் தேசிய கீதம் இசைக்கப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளமை தமிழ் மக்களை பிரித்து காட்டும் ஒரு செயற்பாடு என தமிழக காங்கிரஸ் தலைர் ஜி.கே. வாசன் தெரிவித்துள்ளார்.
அறிக்கை ஒன்றை வெளியிட்டு அவர் இதனை சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் இலங்கை அரசாங்கத்தின் இந்த தீர்மானம் இன,மத நல்லிணக்கத்திற்கு பாதிப்பாக அமையும் எனவும் தமிழக காங்கிரஸ் தலைர் ஜி.கே. வாசன் தெரிவித்துள்ளார்.
சிங்கள மக்களுக்கு உள்ள அனைத்து அதிகார உரிமைகளும் தமிழ் மக்களுக்கும் குறைவில்லாமல் வழங்கப்பட வேண்டியது அவசியம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆகவே, அத்தகைய உரிமையை வழங்கும் வகையில் இலங்கையில் தேசிய கீதம் தமிழ் மொமியிலும் பாடப்பட வேண்டும் என்பதை இந்திய மத்திய அரசு உறுதிப்படுத்த வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
எனவே, இந்த விடயம் உள்ளிட்ட இலங்கை தமிழர்களின் நலன்கள் குறித்து பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான இந்திய அரசு இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுள்ளார்.