கர்த்தரின் பிரியம் யாருக்கு?
சகோதரன். பிரான்சீஸ் அந்தோனிப்பிள்ளை.
ரெகொபோத் ஊழியங்கள் – டென்மார்க்கிற்காக பிரார்த்திப்போம்.
வாசகநேயர்கள் அனைவருக்கும் உள்ளம் நிறைந்த புத்தாண்டு நல்வாழ்துக்கள். சுபீட்சத்துடன்கூடிய மனமகிழ்ச்சியை தினமும் கண்டடைந்து வாழ வாழ்த்துகிறோம்.
புதிய ஆண்டில் நாட்டில் தேர்தல்கள் நடைபெறவிருப்பதால் நாம் அனைவரும் இந்த தேர்தல் மூலம் தமிழ் மக்கள் அமைதியை, ஆறுதலை, சுபீட்சத்தைப் பெற்றுவாழ தேவன் உதவி செய்யும்படியாக தேவனிடம் பிராத்திப்போம்.
அன்பின் பரலோக பிதாவே, நாம் யாவரும் ஒரு மனதோடு எமது தேசத்திற்காக உமது பாதம் வருகிறோம் அப்பா. இந்த தேர்தல்மூலம் தேசமும் மக்களும் அமைதியை, ஆறுதலை, சுபீட்சத்தைப் பெற்றுவாழ உதவி செய்யும் அப்பா. இதுவரை காலமும் தேசமும் மக்களும் அடைந்த துன்பம், சிறுமை, பயம் நிறைநத்த வாழ்க்கையிலிருந்து உமது நாமத்தினால் ஓர் நிதநத்ர சமாதானத்துக்கான வழி பிறக்கட்டும.; உமது தயவினாலும், கிருபையாலும் அமைதியையும், சமாதானத் தையும், சுபீட்சத்தையும் தேசமும், மக்களும் தமது அண்றாடவாழ்வில கண்ட டைந்துகொள்ள நீங்கள் உதவி செய்யும்படியாக இயேசுவின் நாமத்தில் வேண்டி நிற்கிறோம் நல்ல பிதாவே, ஆமென்.
தமக்குப் பயந்து, தமது கிருபைக்கு காத்திருக்கிறவர்கள்மேல் கர்த்தர் பிரியமாயிருக்கிறார், சங்கீதம் 147:11.
கர்த்தர் எம்மை வழிநடத்துகிறவர். அவர் எமக்கு எல்லாமாக இருக்கிறார். நாம் அவருக்கு உண்மையுள்ளவர்களாக இருந்தால், அவரது வழி நடத்தலையும், அவரது பிரசன்னத்தையும் எமது வாழ்வில் அனுதினமும் உணர்ந்து கொள்ளலாம் என்ற மனஉறுதியுடன் புதுவருடம் 2020 ற்குள் பிரவேசிப்போம்.
பொதுவாக மனித உள்ளம் மற்றவரின் பிரியத்திற்காக ஏங்கும் தன்மை கொண்டது என்பதை நாம் மறுக்கமுடியாது. அதுபோலவே, நாம் ஒருவரில் பிரியம் வைத்து விட்டால், அவர்களுக்காக காரியங்களைப் பார்த்து செய்வோமல்லவா. இங்கே தேவனாகிய கர்த்தரின் பிரியத்தைக் குறித்து வேதம் சொல்வது என்ன என்று கவனிபN;பாம். தமக்குப் (கர்த்தருக்குப்) பயந்து, தமது (கர்த்தருடைய) கிருபைக்குக் காத்திருக்கிறவர்கள் N;மல் கர்த்தர் பிரியமாய் இருக்கிறார்.
அவர் தமது பிரியத்தினால் என்னவெல்லாம் செய்கிறார், நொறுங்குண்டவர்களைக் குணமாக்குகிறார். அவர்களது காயங்களைக் கட்டுகிறார். சிறுமைப்பட்டவர்களை விடுவிக்கிறார். நோய்களை குணமாக்குகிறார். இப்படியாகப் பலவற்றை நாம் காணலாம். (ஏசாயா 61:1-3) இன்று வாழ்க்கைப் போராட்டங்களினால் மனம் உடைந்துபோய் நொறுங்குண்டு கிடக்கும் உங்களை ஆண்டவர் காண்க்pறார்.
நட்சத்திரங்களை எல்லாம் பெயரிட்டு அழைக்கும் ஆண்டவர், மகனே, மகளே என்று நம்மையும் பெயர்சொல்லி அழையாததிருப்பாரோ. மிருக ஜீவன்களையும், காக்கை குஞ்சுக்களையும் போசிக்கும் தேவன், தமது சாயலாக தமது ரூபத்தின்படி சிருஸ்டித்த நம்மை போசியாமல் இருப்பாரோ? இதனை நாம் உணர்ந்தால் ஏன் கலக்கம்? ஏன் சோர்வு?
வருடத்தின் ஆரம்பமாகிய இன்று ஆண்டவராகிய கர்த்தரின் பாதத்தில் எம்மை முழுமையாக ஒப்புக்கொடுப்போம். அவருக்குப் பயந்து அவரது கற்பனைகளுக்குக் கீழ்ப்படிந்து வாழ எம்மை அர்ப்பணிப்போம். அவரது கிருபைக்கு காத்திருந்து, கிருபை யைப் பெற்றுக்கொண்டு, கிருபையினாலேயே வாழுவோம். நாம் தான தர்மம் செய்வதனால் கடவுள் நம்மேல் பிரியமாக இருப்பார் என்றென்னி திருப்திபட்டுக் கொள்வதுமுண்டு. ஆனால் ஆண்டவர் இவைகளிலும் பார்க்க தமக்குப் பயந்தவர் களிடத்திலும், தமது கிருபைக்காக காத்திருக்கிறவர்களிடத்திலுமே, பிரியம் வைத்திருப்பதாக தேவனுடைய வார்த்தை உறுதியாகச் சொல்கிறது.
கர்த்தரின் பிரியத்திற்குப் பாத்திரவான்களாய் நம்மை இன்றே அவரிடத்தில் ஒப்புக்கொடுப்போம். நமது சுயவிருப்பங்களைத் தள்ளிவிட்டு, தேவன் தம்முடைய விருப்பத்தை என்னூடாக செய்யும்படியாக எம்மை நாமே ஒப்புக்கொடுப்போம். கர்த்தர் நம்மை பெயரிட்டு அழைத்து, எனக்குப் பிரியமானவனே, பிரியமானவளே என்பாராகில் அதுவே மெய்யான மகிழச்;சி, அதுவே மெய்யான இளைப்பாறுதல். இந்த மகிழச்;சியை வாழ்வில் அடைந்துகொள்ள என்னுடன் இந்த ஜெபத்தில் பங்கெடு.
அன்பின் ஆண்டவரே, எப்பொழுதும் இந்த மண்ணுக்குரியவைகளில் எனது நாட்டத்தைச் செலுத்தாமல், நித்தியமான, உன்னதமான, மேலான காரியங்களை நோக்கிப்பார்க்க உதவி செய்யும் அப்பா. தொடர்ந்து உமக்குப் பிரியமானவைகளைச் செய்ய எனக்குக் கற்றுத்தந்து, உமது கிருபைக்குக் காத்திருந்து, உமக்குள் பெலனடையும் வாழ்வில் நிலைத்திருக்க தேவ ஆவியானவர் துணை செய்வாராக. இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன் நல்ல பிதாவே, ஆமென்.
புதுவருட நல்வாழ்துக்கள் உரித்தாகட்டும.;
கர்த்தர் உங்கள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக!
Bro. Francis T. Anthonypillai. Rehoboth Ministries – praying for Denmark.