ரஜினிகாந்தின் தர்பார் உலகளாவிய பாக்ஸ் ஆபிஸில் நல்ல துவக்கத்தை தந்து உள்ளது. தர்பார் உலகம் முழுவதும் 7000 திரைகளில் வெளியிடப்பட்டு உள்ளது. வர்த்தகத்தில் இருந்து வரும் ஆரம்ப மதிப்பீடு தர்பார் தமிழ்நாட்டில் முதல் நாளில் சுமார் 18 கோடி ரூபாய் வசூலித்து உள்ளது. ஆந்திரா மற்றும் தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் முதல் நாளில் சுமார் 7.5 கோடி ரூபாய் வசூலித்து உள்ளது.
கேரளா மற்றும் கர்நாடகாவிலிருந்து சுமார் ரூ .8 கோடியை ஈட்டியுள்ளது. மொத்தம் தென்னிந்தியாவிலிருந்து மட்டும் ரூ.33.5 கோடி வசூல் செய்து உள்ளது. இந்தியாவின் பிற பகுதிகளிலிருந்து, உள்நாட்டு பாக்ஸ் ஆபிஸில் மொத்தம் ரூ.35 கோடி வசூல் செய்து உள்ளது.
வெளிநாடுகளில், தர்பார் அமெரிக்காவில் சிறப்பாக வசூல் செய்து உள்ளது. பிரீமியர் மற்றும் தொடக்க நாளிலிருந்து, ரஜினிகாந்த் நடித்த தர்பார் 622,129 டாலர் (ரூ.4.43 கோடி) வசூலித்துள்ளது.
இது வளைகுடாவில் சுமார் ரூ .5 கோடி சம்பாதித்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது. மொத்தம் தர்பார் திரைப்படம் வெளிநாடுகள் பாக்ஸ் ஆபிஸிலிருந்து மொத்தம் ரூ.14.5 கோடியை ஈட்டியுள்ளது.
இப்படத்தின் உலகளாவிய மொத்த வசூல் ரூ.49.5 கோடியாக உள்ளது. இவை மதிப்பிடப்பட்ட புள்ளி விவரங்கள் மற்றும் படத்தின் தயாரிப்பாளர்களால் வெளிப்படுத்தப்பட்ட அதிகாரப்பூர்வ வசூல் அல்ல.
ரஜினிகாந்தின் முந்தைய படம் பேட்ட தொடக்க நாளில் உலகளாவிய பாக்ஸ் ஆபிஸில் ரூ. 36.6 கோடியை வசூலித்தது., அதே நேரத்தில் ரஜினியின் 2.0 ரூ.70 கோடியை வசூலித்து இருந்தது