கலை மீது தீராத மோகம் கொண்ட கலைஞர் ஸ்ரீசங்கர்

ஸ்ரீசங்கர் யாழ்ப்பாணம் பருத்தித்துறையைச் சேர்ந்த ஒரு நடிகர். இவர் அந்தனி ஜீவாவின் முள்ளில் ரோஜா, பறவைகள், அக்கினிப்பூக்கள் ஆகிய நாடகங்களில் நடித்ததுடன் கலைஞர் கலைச்செல்வனின் கொள்ளைக்காரன், ஒரு மனிதன் ஒரு உலகம் போன்ற நாடகங்களிலும் மஞ்சள் குங்குமம், குத்துவிளக்கு ஆகிய திரைப்படங்களிலும் நடித்திருக்கின்றார்.

இவர் சிவாஜி கணேசனின் ராஜராஜ சோழன் படத்தில் ஈழத்துப் புலவராகவும் நடித்தார். “கொள்ளைக்காரன்”, “ஒரு மனிதன் இரு உலகம்” முதலான பல நாடகங்களை மேடையேற்றினார்.

இலங்கையின் தமிழ்த் திரைப்படத்துறைக்கும் நாடகத்துறைக்கும் பாரிய பங்களிப்புகளை செய்த ஸ்ரீசங்கர் . தேயிலை ஏற்றுமதி செய்யும் நிறுவனமொன்றில் தேயிலை பரிசோதகராக பணியாற்றியவர்.

கலைத்துறையின் மீது இவர் கொண்ட தீராத பித்தத்தினால் அப்போதே மாதாந்தம் ஆயிரம் ரூபாய் சம்பளத்தை அள்ளித் தந்த தொழிலையையும் தன்னிடம் இருந்த நிதியையும் அர்ப்பணித்தவர்.

இவரது நினைவு நாள் நிகழ்வை கடந்த 40ஆண்டுகளாக இடைவிடாது தொடர்ந்து நடத்தி வருபவர் இவரது நண்பர் ஸ்ரீசங்கர் . இவர் ஸ்ரீசங்கர் நடித்த நாடகங்களில் அவருடன் இணைந்து நடித்தவர். இவரது நண்பர் வீ. ஷண்முகராஜா இவருக்கு உருவச்சிலையும் நிறுவியிருக்கிறார். ஸ்ரீசங்கர் வழங்கிய உதவிகளை மறவாது நினைவு கூர்ந்து இவர் ஸ்ரீசங்கரின் நினைவு தின நிகழ்வை கொழும்பில் நடத்தி வருபவர்.

ஸ்ரீசங்கர் என்ற இந்த கலைஞரின் இயற்பெயர் வைத்தியலிங்கம். இவர், இலங்கையில் எப்படியும் ஒரு தமிழ்ப்படத்தைத் தயாரிக்கவேண்டும் என்று ஆவலுடன் துடித்துக்கொண்டு இருந்தார். கிங்ஸ்லி எஸ்.செல்லையா, ஸ்ரீசங்கர், ஏ. சுந்தரஐயா, பதூர்தீன், பரஞ்சோதி ஆகியோர் ஒரு நாள் ஒன்று கூடி ஒரு தமிழ்ப் படமொன்றை தயாரிக்கத் திட்டமிட்டார்கள். இந்த படத்தை தயாரிக்க ‘கீதாலயம் மூவீஸ்’ என்ற பட நிறுவனத்தை ஆரம்பித்து இந்த திரைப்படத்தை தயாரித்தார்கள்.

Related posts