செல்வச்சந்நிதி முருகன் ஆலய கேணியில் சிறுவன் சடலமாக மீட்பு

தொண்டமனாறு, செல்வச்சந்நிதி முருகன் ஆலயத் கேணியில் சிறுவன் ஒருவனின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக வல்வெட்டித்துறை பொலிஸார் தெரிவித்தனர்.

இன்று (28) காலை நீரில் மூழ்கி உயிரிழந்த நிலையில் சிறுவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாகவும் வல்வெட்டித்துறை பொலிஸார் தெரிவித்தனர்.

ஆலயத்துக்கு வந்த பக்தர்கள் கேணியில் சிறுவனின் சடலம் இருப்பது தொடர்பில் வல்வெட்டித்துறை பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

சம்பவ இடத்துக்கு சென்ற பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

———–

வௌ்ளைவேன் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட இருவரிடமும் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் சுமார் 5 மணித்தியாலம் வாக்குமூலம் பெற்றுள்ளனர்.

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தங்களுக்கு மரண அச்சுறுத்தல் விடுத்துள்ளதாக அவர்கள் நேற்று குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் வாக்குமூலம் ஒன்றை வழங்கியிருந்தனர்.

கடந்த ஜனாதிபதி தேர்தல் காலத்தில் மேற்கொண்ட சர்ச்சைக்குரிய வௌ்ளை வேன் ஊடகவியலாளர் சந்திப்பு தொடர்பில் வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன இரண்டாம் நாளாகவும் நேற்று காலை 11.30 மணியளவில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகி இருந்தார்.

———

சீன பிரஜைகளுக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து வீசா வழங்கும் நடவடிக்கைளை இடைநிறுத்த தீர்மானித்துள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி தெரிவித்துள்ளார்.

நிலவும் அசாதாரண சூழ்நிலையை அடுத்து மீண்டும் அறிவிக்கும் வரையில் இந்த தீர்மானம் அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.

சீன பிரஜைகள் இலங்கை வந்ததற்கு பின்னர் வீசா பெற்றுக் கொள்வதே சாதாரணமாக இடம்பெற்று வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

அதனடிப்படையில் தற்போது முதல் சீன பிரஜைகள் இலங்கை வந்த பின்னர் வீசா பெற்றுக் கொள்ள முடியாது எனவும் அவர்கள் சீனாவில் இருந்தே வீசாவிற்கு விண்ணப்பிக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related posts