ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ரணில். கூட்டணியின் தலைவர் சஜித்- செயற்குழு ஒப்புதல்
ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவராக தொடர்ந்தும் ரணில் விக்கிரமசிங்க செயற்படுவதற்கு கட்சியின் செயற்குழு ஒப்புதல் வழங்கியுள்ளது.
இன்று மாலை ஸ்ரீகோத்தா கட்சி தலைமையகத்தில் கூடிய கட்சியின் செயற்குழு இந்த முடிவை எடுத்துள்ளது.
இதேவேளை எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ ஐக்கிய தேசிய கட்சி தலைமையிலான கூட்டணியின் தலைவராக தெரிவுசெய்யப்பட்டுள்ளதுடன் பிரதமர் வேட்பாளராகவும் போட்டியிடுவதற்கும் செயற்குழு ஒப்புதல் வழங்கியுள்ளது.
இந்த தகவல்களை ஐக்கிய தேசியக்கட்சியின் பொதுசெயலாளர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
இதேவேளை இந்த செயற்குழு கூட்டத்தை சஜித் பிரேமதாச உட்பட்ட 35 நாடாளுமன்ற உறுப்பினர்கள் புறக்கணித்தனர்.
செயற்குழுவில் இருந்து நால்வர் நீக்கப்பட்டமைக்கு ஆட்சேபம் தெரிவித்தே இந்த புறக்கணிப்பு மேற்கொள்ளப்பட்டது.
——-
இலங்கையில் காணாமல் போதல் விடயங்களில் குறைவு காணப்பட்டாலும் ஏனைய குற்றங்களில் பொறுப்புக்கூறல் இல்லை என்று சர்வதேச மன்னிப்புசபை தெரிவித்துள்ளது
மன்னிப்புசபையின் 2019ஆம் ஆண்டுக்கான அறிக்கை இன்று வெளியிடப்பட்டது.
அதில் 2009ஆம் ஆண்டு ஏப்ரலில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களை அடுத்து சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறைகள் நடத்தப்பட்டன.
அவர்களுக்கு எதிரான சுதந்திரத்தில் பாதிப்பு ஏற்பட்டது.
இதேவேளை முன்னைய அரசாங்கத்தின் காலத்தில் ஏற்பட்ட மனித உரிமைகள் தொடர்பான விடயங்களில் முன்னேற்றத்துக்கு மத்தியில் புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததும் அதன் அறிக்கைகள் இந்த முன்னேற்றங்களை மாற்றிவிட்டது என்று மன்னிப்புசபை குறிப்பிட்டுள்ளது.
2019ஆம் ஆண்டைப்பொறுத்தவரையில் இலங்கைக்கு அது கடினமான ஆண்டாகும்.
இதனையடுத்து மனித உரிமைகளை நசுக்கும் ஆயுதமேந்திய பொறுப்பை அந்த சம்பவங்கள் ஏற்படுத்திவிட்டன என்று சர்வதேச மன்னிப்புசபையின் ஆசியப்பணிப்பாளர் ரிஜாய் பட்நாயக் தெரிவித்துள்ளார்.