பிரிட்டிஷ் அகாடமி விருதுகள் லண்டனில் நடைபெற்ற வண்ணமயமான விழாவில் வழங்கப்பட்டன. இதில் கடந்த ஆண்டின் சிறந்த படமாக 1917 தேர்வு செய்யப்பட்டது.
பிரிட்டிஷ் அகாடமியின் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி விருதுகள் (பாப்டா) நேற்றிரவு லண்டனில் நடைபெற்ற வண்ணமயமான விழாவில் வழங்கப்பட்டன. இதில் கடந்த ஆண்டின் சிறந்த படமாக 1917 தேர்வு செய்யப்பட்டது.
ஆஸ்கர் விருதுகள் அடுத்த ஞாயிற்றுக்கிழமையன்று வழங்கப்பட உள்ள நிலையில் அதன் முன்னோட்டமாக கருதப்படும் பாப்டா திரைப்பட விருதுகள் விழா நேற்று நடைபெற்றது.
இதில் சிறந்த படத்திற்கான போட்டியில் ஐரிஷ்மேன், ஜோக்கர் , ஒன்ஸ் அபான் எ டைம் இன் ஹாலிவுட், பாரசைட் போன்ற படங்கள் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய போதும் இறுதியாக இரண்டாம் உலகப்போரை மையமாக கொண்ட 1917 என்ற திரைப்படம் சிறந்த படமாக தேர்வு செய்யப்பட்டது.இப்படத்தை இயக்கிய சாம் மென்டஸ் சிறந்த இயக்குனராக விருது பெற்றார்
ஆங்கிலம் அல்லாத பிறமொழி பட வரிசையில் தென் கொரியாவின் பாரசைட் சிறந்த படமாக தேர்வு செய்யப்பட்டது.ஜோக்கர் படத்தில் நடித்த ஜாக்குயின் பீனிக்ஸ் சிறந்த நடிகராக தேர்வு செய்யப்பட்டார். சிறந்த நடிகைக்கான விருதை ஜூடி படத்திற்காக ரெனீ ஜெல்வெகர் பெற்றார்.
* சிறந்த படம், சிறந்த பிரிட்டிஷ் படம்,சிறந்த இயக்குனர்,சிறந்த ஒளிப்பதிவு,சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு,சிறந்த ஒலி,சிறந்த சிறப்பு காட்சி அமைப்புகள் ஆகிய பிரிவுகளுக்கும் 1917 படத்திற்கு விருது வழங்கப்பட்டது.
* சிறந்த துணை நடிகை லாரா டெர்ன்
* சிறந்த துணை நடிகர் பிராட் பிட்
* சிறந்தசவுண்ட் எபெக்ட்,சிறந்த நடிப்பு – ஜோக்கர்
* ஆங்கில மொழியில் இல்லாத சிறந்த படம், சிறந்த ஒரிஜினல் திரைக்கதை-பாரசைட்
* சிறந்த அறிமுக பிரிட்டிஷ் எழுத்தாளர், இயக்குனர்- பைட்
* சிறந்த ஆவணப்படம்- சாமா
* சிறந்த அனிமேஷன் படம் -க்ளாஸ்
* சிறந்த தழுவல் கதை – ஜோ ஜோ ரேபிட்
* சிறந்த படத்தொகுப்பு – லி மான்ஸ் ’66
* சிறந்த ஆடை வடிவமைப்பு – லிட்டில் வுமன்
* சிறந்த ஒப்பனை & அலங்காரம் – பாம்ப்செல்
* சிறந்த பிரிட்டிஷ் குறும்படம் – லேனிங் டு ஸ்கேட்போர்ட் இன் ஏ வார் சோன்
* வளரும் நட்சத்திர விருது மைக்கேல் வார்டு