நாட்டின் 72 ஆவது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் இந்த உன்னதமான சந்தர்ப்பத்தில் வாழ்த்து செய்தியை உங்களுக்கு அனுப்பவதில் பெரும் மகிழ்ச்சி அடைகின்றேன்.இந்நாளில் சுதந்திரப் போராட்டத்துக்கு தலைமத்துவம் வழங்கிய தேசிய வீரர்களின் இனம், மதம்,சாதி,கட்சி பாராத செயற்பாடுகளை கௌரவமாக நினைவு கூர வேண்டுமென கொழும்பு பேராயர் கார்டினல் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்
சுதந்திர தினத்தை முன்னிட்டு அவர் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவித்துள்ளதாவது:
சுதந்திரம் கிடைத்த பின்னர் கடந்த 7 தசாப்த காலத்திற்கு மேற்பட்ட காலம் முழுவதும் நாம் எதிர்கொண்டவை ஐக்கியத்துக்கு எதிரான சவால்களே ஆகும். நாட்டில் நிலவிய யுத்தம் சகோதர வாஞ்சைகளில் பாதிப்பை ஏற்படுத்தியது. யுத்தம் நிறைவடைந்து 10 வருட காலம் நிறைவடை வதற்கு முன்னர், எமது சகோதர முஸ்லிம்களை சந்தேகம்,அச்சத்துடனும் பார்க்க வேண்டிய சூழல் உருவானது.
இவை அனைத்திலும் பின்புலத்தில் இருப்பது அதிகார ஆசையுடைய அரசியல்வாதிகளே. இதனுடன் தொடர்புபட்ட உள்நாட்டு, வெளிநாட்டு சக்திகளை அடையாளம் காண வேண்டுமென்பதற்கா கவே, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் உரிய விசாரணை நடத்துமாறு கோரினேன்.
இந்தச் சுயநல அரசியல் நோக்கங்கள் மாற்றப்பட வேண்டும். பொது உரிமையை மேலும் மேம்படுத்தி சமாதானம், சௌபாக்கியம் நிறைந்த இலங்கையை கட்டியெழுப்பு வோம்.எமக்கு கிடைத்த அரசியல் சுதந்திரத்தை காலனித்துவத்தின் மூலம் மீண்டும் எம்மிடமிருந்து பறித்துக்கொள்ளும் முயற்சிகளையும் நாம் தோற்கடிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.