சிறிலங்காவின் கோர விபத்து – 4 இளைஞர்கள் பலி!

சிறிலங்காவின் திகன, மெனிக்ஹின்ன பகுதியில் இடம்பெற்ற விபத்தில் நான்கு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர்.

வேகக்கட்டுப்பாட்டை இழந்த கெப் ரக வாகனம் ஒன்று வீதியை விட்டு விலகி அருகில் இருந்த கொங்கிரீட் குவியல் ஒன்றில் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இன்று அதிகாலை 1.35 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ள நிலையில், விபத்தில் படுகாயமடைந்த இளைஞர்கள் மெனிக்ஹின்ன வைத்தியாசலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளனர்.

திருகோணமலை, உஹன மற்றும் மகியங்கனை பிரதேசங்களை சேர்ந்த 17 முதல் 19 வயதுக்கு இடைப்பட்டவர்களே இந்த விபத்தில் உயிரிழந்துள்ளனர்.

மெனிக்ஹின்ன பொலிஸார் விபத்து குறித்த மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

——

இந்தியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கும் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையிலான சந்திப்பு தற்போது புதுடில்லியில் இடம்பெற்று வருவதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, இன்று காலை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

இந்த சந்திப்பின் போது இரு நாடுகளுக்கிடையிலான உறவுகளை வலுப்படுத்துதல், ராணுவம், பாதுகாப்பு, வர்த்தகம் உள்ளிட்ட முக்கிய துறைகளில் ஒத்துழைப்பு உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது.

இதேவேளை, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நேற்று மாலை (7) இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங், ராகுல் காந்தி ஆகியோரை சந்தித்துள்ளார்.

இந்தியாவுக்கான 5 நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு நேற்று காலை டெல்லியை சென்றடைந்த பிரதமரை இந்தியான் மனிதவள மேம்பாட்டுத்துறை இணையமைச்சர் சஞ்சய்தோத்ரே வரவேற்றமை குறிப்பிடத்தக்கது.

——–

Related posts