உணவு தயாரிப்பு தொழில்முனைவோருக்கான சர்வதேச உணவு ஆய்வகம்

சிறு, நடுத்தர மற்றும் பெரிய அளவிலான தொழில்முனைவோரின் உணவுப் தயாரிப்புகளை ஆய்வு செய்து சர்வதேச மட்டத்தில் தரச்சான்றிதழ் வழங்குவதற்கானஉணவு ஆய்வகம்(Food Laboratory) நிறுவப்படவுள்ளதாக கைத்தொழில் அமைச்சு தெரிவித்துள்ளது.

கைத்தொழில் அமைச்சு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இதனைத் தெரிவித்துள்ளது. அமைச்சின் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;

தற்போதைய தொழில்நுட்ப முன்னேற்றங்களுடன், மனித வாழ்க்கை மிகவும் பரபரப்பாகிவிட்டது. இந்த கால கட்டம் கிராமப்புற மற்றும் நகர்ப்புற மக்களுக்கு ஒரே மாதிரியான அதாவது இளைஞர்கள் மற்றும் முதியவர்கள் வாழ்க்கை முறையை முன்னிட்டு செயற்கை மற்றும் துரித உணவை பயன்படுத்துவதற்கு பழகியுள்ளனர். இதன் விளைவாக, பதப்படுத்தப்பட்ட உணவுத் (processed food) தொழிலுக்கான தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஆனால் உணவை பயன்படுத்தும்போது, உணவின் தரத்தில் பிரச்சினைகள் உள்ளன.

ஆனால் சிறு, மற்றும் நடுத்தர அளவிலான கைத்தொழில் துறையில் தொழில்முனைவோருக்கு அவர்கள் தயாரிக்கும் உணவுகளின் தரத்தை பரிசீலிப்பதற்கு போதியளவு ஆய்வக வசதிகள் இலங்கையில் இல்லை என்பதோடு, இந்த தேவையை பூர்த்தி செய்ய தலைநகரில் போதுமான ஆய்வக வலையமைப்பு வசதிகள் தற்போது இல்லை.

உணவுத் தொழில் துறையில் தொழில்முனைவோரின் இந்த சிக்கலை உணர்ந்து, இலங்கையின் கைத்தொழில் அபிவிருத்தி சபை 50 ஆண்டு நிறைவை அடைந்துள்ள இத்தருணத்தில் அதற்கு ஏற்றவாறு சிறு, நடுத்தர மற்றும் பெரிய அளவிலான தொழில்முனைவோரின் உணவுப் தயாரிப்புகளை ஆய்வு செய்து சர்வதேச மட்டத்தில் தரச்சான்றிதழ் ஒன்றை வழங்குவதற்கானஉணவு ஆய்வகத்தை (Food Laboratory) நிறுவுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்த உணவு ஆய்வகத்தை 13ஆந் திகதி (வியாழக்கிமை) கைத்தொழில் மற்றும் வழங்கல் முகாமைத்துவ அமைச்சர் விமல் வீரவன்ச மக்களிடம் கையளிக்கவுள்ளார்.

இந்த உணவு ஆய்வகத்தின் மூலம் உணவு தயாரிப்பு சோதனை, தயாரிப்பு காலாவதி திகதி சோதனை, ஊட்டச்சத்து உள்ளடக்க சோதனை, உணவு பாதுகாப்பு நிர்ணயம், உணவு விஷம் மற்றும் பூச்சிக்கொல்லி மாசுபாடு சோதனை போன்ற சேவைகளை வழங்குகிறது.

கட்டுபெத்த தலைமை அலுவலகத்தில் அமைந்துள்ள இந்த ஆய்வகம், உணவுத் தயாரிப்புகளின் பாதுகாப்பிற்காக சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ்களை தொழில்துறையிலுள்ள தொழில்முனைவோருக்கு வழங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Related posts