உலகத்தில் இன்று உரிமையாளர் இன்றி வீடு வீடாக பிச்சை எடுத்து வாழ்வது போன்ற அவல நிலையில் வாழம் அநாதைகளான பூனைகள் தொகை டென்மார்க்கில் வகை தொகையின்றி பெருகிவிட்டதாக இன்றைய காலை செய்திகள் கூறுகின்றன.
அநாதைப் பூனைகளின் எண்ணிக்கை 2018ம் ஆண்டுடன் ஒப்பிட்டால் 2019 ம் ஆண்டு 40 வீத உயர்வு கண்கள்ளதாக கூறுகிறது அரசு. சென்ற ஆண்டு மட்டும் இத்தகைய பூனைகளை பராமரிக்க 30 மில்லியன் குறோணர்கள் அரசிற்கு செலவாகியுள்ளது.
எனவே வளர்ப்பு மிருகங்களின் நல்வாழ்வை கருத்தில் கொன்டு, உரிமையாளர் இல்லாத, வீதிகளில் அலையும் பூனைகளுக்கு சிறப்பு அடையாளமிடும் பணிகளை முன்னெடுக்க வேண்டும் என்ற கோரிக்கை முன் வைக்கப்பட்டுள்ளது.
இவைகளுக்கு மேலே ஒருவகை பூச்சி உள்ளது. ஆகவே அதற்கான தடுப்பூசிகள்போடப்பட வேண்டும் என்று யோசனை ஒன்று முன் வைக்கப்படுவதாகவும் அச் செய்தி கூறுகிறது.
ஆனால் அவ்வாறு அடையாளமிட்டாலும் அவற்றை சரியான முறையில் பிரித்தறிவது வீதியில் செல்லும் சாதாரண மனிதர்ககளுக்கு கடினம் என்றும் கூறுகிறார் அமைச்சர்.
” மற்றய நாடுகளில் இது தொடர்பான நடவடிக்கைகள் எவ்வாறுள்ளன என்ற அவதானிக்க வேண்டும் ” என்றும் கூறுகிறார்.
எனினும் இப்போது இத்தகைய பூனைகள் தொடர்பாக புதிய சட்ட யோசனை ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது. இது விவாதத்திர்கு வருகிறது. பியா கியாஸ்கோ அம்மையார் இத்தகைய மிருகங்களின் நலனுக்கு பொறுப்பாக இருப்பதால் நல்ல முடிவை வாதாடிப் பெறுவார் என்று நம்பிக்கை பிறக்கிறது.
அலைகள் 14.02.2020