இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் மீது விதிக்கப்பட்ட பயணத் தடையை மறுபரிசீலனை செய்யுமாறு இலங்கை அரசு அமெரிக்காவிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
இலங்கைக்கான அமெரிக்க தூதர் அலைனா டெப்லிட்ஸ் (Alaina B. Teplitz)இன்று வெளியுறவு அமைச்சர் தினேஷ் குணவர்தனவை சந்தித்தபோது இக்கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
இதன்போது, இராணுவத் தளபதி மீது விதிக்கப்பட்ட பயணத் தடை குறித்தான இலங்கை அரசின் ஆட்சேபனையையும் அமெரிக்க தூதுவருக்கு அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.
அதற்கமைய, இவ்விடயம் தொடர்பில் அமெரிக்க அரசிற்கு விளக்குவதாக அமெரிக்க தூதுவர் அலைனா டெப்லிட்ஸ் வெளியுறவுகள் அமைச்சர் தினேஷ் குணவர்தனவிடம் தெரிவித்துள்ளார்.
யுத்த மனித உரிமை மீறல் குற்றச்சாட்டு தொடர்பில் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வாவுக்கு அமெரிக்காவுக்குள் நுழையத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கஇராஜாங்கச் செயலகம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
இராணுவத்தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்ர சில்வாவிற்கும் அவருடைய குடும்பத்தினருக்கும் எதிராக அமெரிக்கா பயணத்தடைவிதித்துள்ளமை
துரதிஷ்டவசமானதும் வருந்தத்தக்கதுமான மான விஷயம் என எதிர்க்கட்சி தலைவர் சஜித்பிரேமதாச தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பிலேயே சஜித் பிரேமதாச அவருடைய உத்தியோக பூர்வ டுவிட்டர் தளத்தில் இவ்வாறாக கருத்து வெளியிட்டுள்ளார்.
இராணுவத்தளபதி சவேந்திர சில்வாவிற்கும் அவருடைய குடும்பத்தினருக்கும் எதிராக பயணத்தடைவிதித்தள்ளமை துரதிஸ்டவசமானதும் வருந்தத்தக்கதுமான செயலுமாகும்அந்தவகையில் பயங்கரவாதத்தை ஒழிப்பதற்காக தலைமை தாங்கிய தளபதிகளில் ஒருவர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.