பாதுகாப்பு அமைச்சர் ஒருவரை நியமிக்க முடியாளவுக்கு நாட்டின் பாதுகாப்பு நிலை..!

ஜனாதிபதி தேர்தலின் போது தேசிய பாதுகாப்பை பெரிதும் வலியுறுத்திய ஜனாதிபதி தற்போது பாதுகாப்பு அமைச்சர் ஒருவரை கூட நியமிக்க முடியாதுள்ளார் என மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்தார்.

இவ்வாறான நிலையில் நாட்டின் தேசிய பாதுகாப்பை உறுதி செய்ய முடியும் . தேர்தலில் வெற்றிபெற்றது முதல் தற்போது வரை மக்களின் வாழ்வாதார பிரச்சினைக எதுவும் தீர்க்கப்படவில்லை. மக்களுக்கு மேலதிக நெருக்கடி நிலைமையே உருவாக்கப்பட்டுள்ளது.

நாட்டின் கடன் தொகையினை செலுத்த முடியாமல் மேலதிக கால அவகாசம் கேட்கும் நிலைமைக்கு இந்த அரசாங்கம் நாட்டை கொண்டு வந்துள்ளது. வரி சலுகைகள்வ ழங்கப்பட்டிருந்தாலும் மக்கள் அதன் பலன்களை பெற்றுக்கொள்ளவில்லை.

அரசாங்கத்தினை பொறுப்பேற்று மூன்று மாத காலம் ஆன நிலையில் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் அதிகரிப்பு ஏற்பட்டதே தவிர சலுகைகள் எதுவும்
கொண்டுவரப்படவில்லை.

குறைந்த வருமானம் பெரும் குடும்பங்களுக்கு 3000 ரூபா பெறுமதியான நிவாரண உலர்உணவு பொதிகள் வழங்குவதாக குறிப்பிட்டிருந்த அரசாங்கம் இதுவரையில் அதற்கான நடவடிக்கைகள் எதுவும் மேற்கொள்ளவில்லை.

அரிசி மற்றும் மரக்கறிகள் போன்ற அத்தியாவசிய பொருட்களின் விலைகள் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. மக்கள் தங்களின் வாழ்க்கை செலவீனத்தை ஏற்று நடத்த முடியாத நிலைக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர்.

மார்ச் முதலாம் திகதி பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு பெற்று தருவதாக அறிவித்துள்ள போதும் அதற்கான எவ்வித நடவடிக்கையும் தற்போது மேற்கொண்டு
வருவதாக தெரியவில்லை . பட்டதாரிகளுக்கான அரச தொழிலுக்கு வயது வரையறுக்கப்பட்டுள்ளது.

இதன் பிரகாரம் 2012 ஆம் ஆண்டில் பட்டதாரியானவருக்கு தற்போது வயது 45 ஐ தாண்டியிருக்கும். இவர்கள் அரச தொழிலை நம்புவது சாத்தியமானதல்ல. பல்கலை கழகங்களில் இருந்து வெளியேறும் பட்டதாரிகள் வெளியேறும் போதே வேலைவாய்ப்பை பெற்றுக்கொள்ள கூடியதாக இருக்க வேண்டும் என்றார்.

Related posts