இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான அணுஆயுத போர் மூண்டால் 5 கோடி முதல் 12.5 கோடி வரை மக்கள் பலியாவார்கள் முனிச் பாதுகாப்பு அறிக்கை தெரிவித்து உள்ளது.
இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான அணுஆயுத போர் 2025 இல் ஏற்படக்கூடும் என்றும் இதில் 5 கோடி முதல் 12.5 கோடி வரை மக்கள் கொல்லப்படக்கூடும் என்று முனிச் பாதுகாப்பு அறிக்கை 2020 கூறி உள்ளது.
மேலும் அந்த அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
காஷ்மீரில் ஒரு தீவிரவாத தாக்குதல் இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பதற்றங்களை அதிகரிக்க வழிவகுக்கும், மேலும் இரு அணுசக்தி நாடுகளுக்கிடையில் ஒரு முழு அளவிலான இராணுவ மோதலுக்கு கூட வழிவகுக்கும்.
இந்தியாவும், பாகிஸ்தானும் முறையே 100 மற்றும் 150 அணு ஆயுதங்களை வைத்துள்ளன. இரு நாடுகளும் 15 முதல் 100 கிலோ டன் அணு ஆயுதங்களை பயன்படுத்தும் இதன் விளைவாக 1.6-3.6 கோடி டன் கருப்பு கார்பன் புகை வெளியேறும்.
இதன் விளைவாக 5 கோடி முதல் 12.5 கோடி வரை மக்கள் உடனடியாக கொல்லப்படக்கூடும், பூமியின் மேற்பரப்பு சூரிய ஒளியில் 20-35 சதவிகிதம் சரிவு ஏற்படும். நிலத்தில் உற்பத்தித்திறன் 15-30 சதவிகிதம் மற்றும் கடல்களில் நீர்மட்டம் 5-15 சதவிகிதம் சரிவு ஏற்படும் என கூறி உள்ளது.
கடந்த ஆண்டு அக்டோபரில், கொலராடோ போல்டர் பல்கலைக்கழகம் மற்றும் ரட்ஜர்ஸ் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில், இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணு ஆயுத போர் ஒரு வாரத்திற்கும் குறைவாக நீடிக்கும் மற்றும் 5 கோடி முதல் 12.5 கோடி மக்கள் வரை கொல்லக்கூடும். இறப்பு எண்ணிக்கை இரண்டாம் உலகப் போரை விட அதிகமாக இருக்கும் என்று அறிக்கை கூறியுள்ளது.