கிழக்கில் 4 கட்சிகள் இணைந்து தமிழர் ஐக்கிய முன்னணி கட்சி உருவாக்கப்பட்டுள்ளதுடன் அதன் சின்னம் உதயசூரின் சின்னம் தெரிவு செய்யப்பட்டு தேர்தலில் களமிறங்கவுள்ளதாக கிழக்கு தமிழர் ஒன்றிய தலைவரும் சிரேஷ்ட சட்டத்தரணியுமான ரி. சிவநாதன் தொரிவித்தார்
மட்டக்களப்பு ஏரன்ஸ் வீதியில் அமைந்துள்ள கிழக்கு தமிழர் ஒன்றியத்தின் தலைமைகாரியலயத்தில் நேற்று (22) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் தமிழர் விடுதலைக் கூட்டணி தலைவர் வி. ஆனந்த சங்கரி, இலங்கை தமிழர் முற்போக்கு முன்னணி கட்சி தலைவர்முன்னாள் பிரதி அமைச்கருமான நா.கணேசமூர்த்தி ஆகியேர் கலந்து கொண்டுனர். இதன் போது கிழக்கு தமிழர் ஒன்றிய தலைவரும் சிரேஷ்ட சட்டத்தரணியுமான ரி. சிவநாதன் இவ்வாறு தெரிவித்தனர்.
கிழக்கு தமிழர் ஒன்றியம் நீண்ட காலமாக கிழக்கில் அனைத்து தமிழ் கட்சிகளையும் ஒன்றினைத்து பொதுச் சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்ற முயற்சியை கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் ஆரம்பித்து இன்று சிவராத்திரி தினத்தில் வெற்றி கண்டுள்ளது.
கிழக்கு தமிழர் ஒன்றிய தலைமைக் காரியாலயத்தில் இடம்பெற்ற செயற்குழு கூட்டத்திலே எதிர்வருகின்ற பாராளமன்றம் மாகாணசபை தேர்தலில் போட்டியிட வைப்பதற்கான கலந்துரையாடல் சுமூகமான முறையில் இடம்பெற்றது தமிழர் ஐக்கிய முன்னணி பெயர் கொண்ட கூட்டணி அமைக்கப்பட்டு இதன் சின்னம் உதய சூரியன் ஆகும்.
தற்போது 4 கட்சிகளான பி. ஆனந்த சங்கரியை தலைசராக கொண்ட தமிழர் விடுதலைக் கூட்டணி, சிரேஷ்ட சட்டத்தரணியான ரி. சிவநாதன் பாராளுமன்ற உறுப்பினர் எஸ். வியாழேந்திரனை தலைவராக கொண்ட முற்போக்கு தமிழர் அமைப்பு, முன்னாள் பிரதி அமைச்சாரன நா. கணேசமூர்தியை தலைவரான கொண்ட இலங்கை தமிழர் முற்போக்கு முன்னணி ஆகிய 4 கட்சிகள் இன்று இணைந்து தமிழர் ஐக்கிய முன்னணி என கட்சி உருவாக்கப்பட்டு தமிழ் மக்களின் கட்சியான தமிழர் விடுதலைக் கூட்டணயின் சின்னமான உதய சூரியன் சின்னத்தை இந்த தமிழர் ஜக்கிய முன்னணியின் ஏகோபித்த சின்னமாக தெரிவு செய்து உடன்பாட்டில் கைச்சாத்துட்டுள்னர்.
தமிழ் தேசிய கூட்டமைப்புடன் கிழக்கு தமிழர் ஓன்றியம் பேச்சு வார்த்தையில் பல தடவை ஈடுபட்டோம் அவர்கள் எங்கள் கொள்கையை ஏற்றுக் கொண்டிருந்தனர். கள நிலை யதார்த்த நிலையை உணர்ந்து எமது முயற்சி நன்று என்றனர். ஆனால் தாங்கள் வீட்டு சின்னத்தை விட்டு எமது சின்னத்தில் வருவது பிரச்சனையுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.
கிழக்கு மாகாணத்தின் கள நிலையை கருத்தில் கொண்டு தமிழ் தேசிய கூட்டமைப்பை விடுத்து ஏனைய தமிழ் கட்சிகள் ஒன்றினைந்து ஒரு குடையின் கீழ் சேர்ந்து போட்டியிடுவது மிகவும் சாதூரியமானது சானக்கியமான விடயமாக அமையும் இதன் மூலம் தமிழர்களின் வாக்கு சிதறடிக்காமல் கனிசமான ஆசனங்களை பெற்றுக் கொள்ளலாம்.
கடந்த காலத்தில் தேசிய தலைவர் தமிழ் மக்களின் வாக்கு சிதறக் கூடாது என அவர் துரோகி என்றும் தியாகி என்றும் பார்க்காமல் அவருக்கு துரோகிகளாக இருந்த இயக்கங்களையும் சேர்த்து இந்த தமிழ் தேசிய கூட்டமைப்பை உருவாக்கியிருந்தார்.
அதேபோல கிழக்கு மாகாணத்தில் வாக்குகள் சிதறக் கூடாது என கருத்தில் எடுத்து அம்பாறை மட்டக்களப்பு திருகோணமலை மாவட்டங்களில் தமிழ் கட்சிகள் ஒன்றினைகின்றோம்.
தமிழ் தேசிய கூட்டமைப்பு என்ன நோக்கத்துக்காக உருவாக்கப்பட்டதோ அதே நோக்கம் தான் இந்த தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியும் உருவாக்கப்பட்டுள்ளது.
அதன் மூலம் தமிழ் மக்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பது அதன் மூலம் இனப் பிரச்சனைக்கான சாத்தியமான தீர்வை அடைவது அதன் மூலம் தமிழ் மக்களின் அபிவிருத்தி பாதையை முன்னெடுப்பது எனவே வெறுமனமே போலி தேசியம் பேசி தமிழ் மக்களை பட்டினிச் சாவில் போட விரும்பவில்லை தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு எதிரானனவர்ள் அல்ல அவர்கள் இதுவரை காலம் பயணித்த விதம் தமிழ் மக்களை பாதுகாக்க கூடியதானது அல்ல.
அவர்கள் தனிநலனை பேணக் கூடியதை தான் இதுவரை காலமும் இருந்தது. ஆகவே தமிழ் மக்கள் அவர்கள் மீது நம்பிக்கையில்லை எனவே தமிழ் மக்களை பாதுகாக்க கூடிய மாற்று அணி தேவை அது புத்துஜீவிகள் கொண்ட நல்ல அமைப்பை உருவாவேண்டும் என மக்களின் அவாவாக இருந்தது அதனால் இந்த அணியை உருவாகியுள்ளோம்.
எனவே ஏனைய தமிழ் கட்சிகள் வந்து இணையுமாறு அழைப்பு விடுகின்றோம் அதேவேளை கருணா அம்மானை கொண்டு தமிழ் ஐக்கிய சுதந்திர முன்னணி கட்சியும் எம்முடன் நேர்ந்து செயற்பட விருப்பம் தெரிவித்துள்ளனர். அவர்கள் எதிர்வரும் நாட்களில் உடன்படிக்கையில் கைச்சாத்திடவுள்ளனர் என அவர் தெரிவித்தார்.