தலைவி படம் வெற்றி பெறும் ஆடுகளமல்ல.. போக போகவே புரியும்..!

ஜெயலலிதா வாழ்வை படமாக்குவது கடினம்..
அவருடைய நல்ல பக்கங்களை மட்டும் சொன்னாலும் பிரச்சனை வரும் தீய பக்கங்களை சொன்னாலும் சிக்கல்..
உண்மையை சொன்னால் அதிமுக ஆர்பாட்டம் செய்யும்..!
பொய்கை சொன்னால் திமுக ஆர்பாட்டம் செய்யும்..
நேர்மையான சொன்னால் யாருமே ஏற்க மாட்டார்.. படம் எடுக்கும் போது பரபரப்பாக இருக்கும்..
ஓடும் போதுதான் பூதம் வரும்..
ஜெ மரணம் மர்மமானது..
அவருடைய ஊழல் இமயம் போன்றது.. என்ன செய்யப்போகிறது படக்குழு பார்க்கலாம்..
வெற்றி பெறும் ஆடுகளமல்ல இது..!

—–

‘தலைவி’ ஜெயலலிதா வேடத்தில் கங்கனா ரணாவத்தும், எம்.ஜி.ஆர் கதாபாத்திரத்தில் அரவிந்தசாமியும் நடிக்கின்றனர். விஜய் டைரக்டு செய்கிறார்.

மறைந்த முதல்–அமைச்சர் ஜெயலலிதா வாழ்க்கை கதையை ‘தலைவி’ என்ற பெயரில் படமாக்குகின்றனர். ஜெயலலிதா வேடத்தில் கங்கனா ரணாவத்தும், எம்.ஜி.ஆர் கதாபாத்திரத்தில் அரவிந்தசாமியும் நடிக்கின்றனர். விஜய் டைரக்டு செய்கிறார். விஷ்ணுவர்தன் இந்தூரி, சாய்லேஷ் சிங் தயாரிக்கின்றனர்.

தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் தயாராகிறது. கங்கனா ரணாவத், அரவிந்தசாமி ஆகியோரின் முதல் தோற்றங்களை படக்குழுவினர் ஏற்கனவே வெளியிட்டனர். அரவிந்தசாமியின் தோற்றம் எம்.ஜி.ஆர் போலவே இருப்பதாக பாராட்டுகள் கிடைத்தன. இதன் மூலம் படத்துக்கு எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது.

இந்த நிலையில் ஜெயலலிதாவாக வரும் கங்கனா ரணாவத்தின் 2–வது தோற்றமும் தற்போது வெளியாகி உள்ளது. இதில் அ.தி.மு.க கட்சி கொடி நிறத்தில் ‘பார்டர்’ உள்ள சேலை அணிந்து கங்கனா ரணாவத் காட்சி அளிக்கிறார். இந்த தோற்றம் சிறப்பாக இருப்பதாக ரசிகர்கள் பாராட்டி உள்ளனர். தலைவி படத்தில் பூர்ணா, மதுபாலா ஆகியோரும் நடிப்பதாக தற்போது அறிவிக்கப்பட்டு உள்ளது.

சசிகலா வேடத்தில் பூர்ணாவும், எம்.ஜி.ஆரின் மனைவி ஜானகி கதாபாத்திரத்தில் மதுபாலாவும் நடிக்கின்றனர். படத்தில் கங்கனா ரணாவத் பரத நாட்டியம் கற்று நடித்து வருகிறார். படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடக்கிறது. தலைவி படம் வருகிற ஜூன் மாதம் 26–ந்தேதி திரைக்கு வருகிறது. ‘‘இந்த படத்தில் நடிப்பது சவாலாக உள்ளது’’ என்று கங்கனா ரணாவத் கூறியுள்ளார்.

Related posts