எகிப்து நாட்டின் முன்னாள் ஜனாதிபதி முகமது ஹொஸ்னி முபாரக் தனது 91 ஆவது வயது காலமானதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
கெய்ரோவில் உள்ள வைத்தியசாலையிலேயே அவர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
சுமார் 850 பேரை தனது பாதுகாப்பு படைகளை கொண்டு கொலை செய்த குற்றத்திற்காக ஹொஸ்னி முபாரக் கடந்த 2011 ஆம் ஆண்டு ஏற்பட்ட மக்கள் எழுச்சியின் பின்னர் கைது செய்யப்பட்டு அந்நாட்டு இராணுவ தடுப்பில் வைக்கப்பட்டிருந்தார்.
ஹொஸ்னி முபாரக் சுமார் 30 வருட காலம் எகிப்தை ஆட்சி செய்தமை குறிப்பிடத்தக்கது.