தோல்வியால் புதிய படத்தில் இருந்து சமந்தா நீக்கம்?

நடிகை சமந்தா ஒப்பந்தமான புதிய படத்திலிருந்து நீக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

தமிழில் பாணா காத்தாடி, நான் ஈ, அஞ்சான், கத்தி, தங்க மகன், தெறி, சீமராஜா, சூப்பர் டீலக்ஸ் உள்ளிட்ட படங்களில் நடித்த சமந்தா தெலுங்கு திரையுலகிலும் கொடி கட்டி பறக்கிறார். தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணமும் செய்து கொண்டார். தமிழில் விஜய் சேதுபதி, திரிஷா நடித்து வெற்றி பெற்ற ‘96’ படம் தெலுங்கில் ‘ஜானு’ என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது.

இதில் திரிஷா கதாபாத்திரத்தில் சமந்தாவும், விஜய்சேதுபதி வேடத்தில் சர்வானந்தும் நடித்தனர். ஆனால் படம் திரைக்கு வந்து எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. படத்தை உலகம் முழுவதும் ரூ.21 கோடிக்கு விற்றதாகவும், ரூ.14 கோடி நஷ்டம் ஏற்பட்டு உள்ளதாகவும் இணைய தளங்களில் தகவல் பரவி வருகிறது.

ஏற்கனவே மகாசமுத்திரம் என்ற படத்தில் நடிக்க சமந்தாவை ஒப்பந்தம் செய்து இருந்தனர். இப்போது அவரை நீக்கிவிட்டனர். சமந்தாவுக்கு பதிலாக அதிதிராவ் நடிப்பார் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. ஜானு படம் தோல்வியானதால் சமந்தாவை நீக்கிவிட்டு அதிதிராவை ஒப்பந்தம் செய்து இருப்பதாக தகவல் பரவி வருகிறது.

இதை பார்த்து கோபமான அதிதிராவ், “வெற்றியோ தோல்வியோ நடிகர், நடிகையின் தன்னம்பிக்கையை பாதிக்காது. இதுபோன்ற கருத்து களை ஆதரிக்க வேண்டாம். கதாபாத்திரங்களுக்கு இவர்தான் சரியாக இருப்பா

Related posts