வரலாற்று சிறப்பு மிக்க கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழாவின் கூட்டுத்திருப்பலி இன்று (07) மிகசிறப்பாக இடம்பெற்றது.
இவ் கூட்டுத்திருப்பலியினை யாழ் மறைமாவட்ட ஆயர் கலாநிதி ஜெஸ்டின் ஞானப்பிரகாசம் ஆண்டகை கலந்துகொண்டு இவ் திருப்பலியினை ஒப்புக்கொடுத்தார்.
இங்கு புனித அந்தோனியாரின் திருச்சுருவப்பவனியும் சிறப்பாக இடம்பெற்றன.
இவ் திருவிழாவுக்காக இலங்கை மற்றும் இந்தியாவில் இருந்து 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொண்டு இருக்கின்றார்கள்..
இவ் நிகழ்வில் யாழ் இந்திய உதவித் தூதுவர் சங்கர் பாலச்சந்திரன், யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன்,யாழ் மாநகர முதல்வர் இமானுவேல் ஆனோல்ட், யாழ் மாவட்ட கட்டளைத் தளபதி மேஐர் ஜெனரல் ரூவன் வணிகசூரிய, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அங்கஐன் இராமநாதன், காலி மறைமாவட்ட குருமுதல்வர் றேமன் விக்கிரமசிங்க, இந்தியா சிவகங்கை மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை லூர்துராஐா, தஞ்சாவூர் மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஞானப்பிரகாசம், மற்றும் இந்திய யாத்திரிகள்,இலங்கை பக்தர்கள்,பலரும் கலந்துகொண்டனர்.
-யாழ். நிருபர் ரமணன்-