திமுக பொதுச் செயலாளர் க. அன்பழகன் காலமானார் ​


திமுக தலைவர் கருணாநிதியும் திமுக பொதுச் செயலாளர் அன்பழகனும் வாழ்நாள் முழுவதும் தங்கள் நட்பைத் தொடர்ந்து நட்புக்கு இலக்கணமாக விளங்கினர். வாழும்போதும் இணை பிரியாத அவர்கள் ஒற்றுமை மரணத் தேதியிலும் ஒன்றாக இருந்த விநோதம் நிகழ்ந்துள்ளது.

கலைஞர் கருணாநிதியும் பேராசிரியர் அன்பழகனும் 1942-ல் சந்தித்தது முதல் நட்பாக இருந்து வருகின்றனர். கருணாநிதியைவிட 2 வயது மூத்தவராயினும் இவர்கள், நட்புக்கு எடுத்துக்காட்டாக விளங்கிய தலைவர்கள் எனலாம். இருவரும் 75 ஆண்டுகளைக் கடந்து நட்புடன் வாழ்ந்து வந்தனர்.

2018-ம் ஆண்டு ஆகஸ்ட் 7-ம் தேதி கலைஞர் கருணாநிதி உயிரிழந்தார். அவரின் மறைவு இருவரின் நட்புப்பயணத்துக்கு முற்றுப்புள்ளி வைத்தது. அதன் பின்னர் அன்பழகனும் மனதளவில் ஒடிந்துபோனார். 2018-ம் ஆண்டு ஸ்டாலின் திமுக தலைவராகப் பதவியேற்ற பொதுக்குழுக் கூட்டத்தில் தலைவராக முன்மொழிந்தது, அதன் பின்னர் சிலை திறப்பு விழா கூட்டம் என ஓரிரு கூட்டத்துடன் பேராசிரியர் அன்பழகன் பொதுவாழ்வுப் பணியை நிறுத்திக்கொண்டார்.

இந்நிலையில் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த க.அன்பழகன் மார்ச் 7-ம் தேதி காலமானார். மரணத் தேதியிலும் நண்பர்கள் இருவருக்குமிடையே உள்ள ஒற்றுமை இயற்கையாக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அன்பழகனின் மரணத்துக்கு முந்தைய நாளான மார்ச் 6-ம் தேதி அன்றுதான் திமுக ஆட்சிக்கட்டிலில் முதன் முதலாக 1967-ல் அமர்ந்தது. திமுகவை உருவாக்கிய தலைவர்களில் ஒருவரான அன்பழகன் எண்ணம் நிறைவேறிய நாள் அது என்பது நினைவுகூரத்தக்கது.

—–

தி.மு.க. பொதுச் செயலாளராகவும், தமிழக அரசியலில் மூத்த தலைவர்களில் ஒருவராகவும் விளங்கியவர் பேராசிரியர் அன்பழகன் (வயது 98). உடல்நிலை பாதிப்பு முதுமையின் காரணமாக உடல்நிலை பாதிக்கப்பட்டு கடந்த சில வருடங்களாக கீழ்ப்பாக்கத்தில் உள்ள வீட்டில் ஓய்வில் இருந்தார்.

அவருக்கு வீட்டிலேயே சிகிச்சை அளித்து வந்தனர். கடந்த மாதம் 24-ந் தேதி அவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது. உடனடியாக சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப் பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வந்தனர்.

வயது முதிர்வு காரணமாக அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் பலன் அளிக்கவில்லை. நினைவிழந்த நிலையில் இருந்த அவர் இன்று அதிகாலை 1 மணி அளவில் ஆஸ்பத்திரியில் மரணம் அடைந்தார்.

அன்பழகன் மரணம் அடைந்த தகவல் அறிந்ததும் மு.க.ஸ்டாலின் உடனடியாக ஆஸ்பத்திரிக்கு விரைந்து சென்று அஞ்சலி செலுத்தி கண் கலங்கினார். அவருடன் துரைமுருகன், டி.ஆர்.பாலு, ஆர்.எஸ்.பாரதி, கே.என்.நேரு, கனிமொழி எம்.பி., ஆ.ராசா, பொன்முடி, எ.வ.வேலு, ஜெ.அன்பழகன் உள்ளிட் டோரும் அஞ்சலி செலுத்தினார்கள்.

அதிகாலை 3 மணி அளவில் அன்பழகனின் உடல் கீழ்ப்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டுக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

மு.க.ஸ்டாலின் இன்று காலையிலும் அன்பழகன் வீட்டுக்கு சென்று அவரது உடலுக்கு மீண்டும் அஞ்சலி செலுத்தினார். கண்ணீர் ‘மல்க’ அங்கேயே அமர்ந்திருந்தார். அவருடன் கட்சி நிர்வாகிகளும் அங்கேயே இருந்தனர்.

தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் ஜெ.அன்பழகன், மா.சுப்பிர மணியன், தேர்தல் ஆலோசகர் பிரசாந்த்கிஷோர், மாதவரம் சுதர்சனம், சேகர்பாபு, தா.மோ.அன்பரசன், சுந்தர், ஆவடி நாசர், ஆவுடை யப்பன், எம்.எல்.ஏ.க்கஷீமீ ப.ரங்கநாதன், பல்லாவரம் இ.கருணாநிதி, பூங்கோதை ஆலடி அருணா, தாயகம் கவி, எஸ்.ஆர்.ராஜா, ரவிச்சந்திரன், மோகன், வரலட்சுமி மதுசூதனன்,
அரவிந்த் ரமேஷ், தலைமை கழக நிர்வாகிகள் பூச்சி முருகன், துறைமுகம் காஜா மற்றும் ராமலிங்கம், ஐ.கென்னடி, வக்கீல் ரகு, படப்பை மனோ கரன், பல்லாவரம் ஜோசப் அண்ணாதுரை, கூ.பி.ஜெயின், ஐ.சி.எப். முரளி, பல்லாவரம் ரஞ்சன், நித்யா உள்பட ஏராளமான கட்சி நிர்வாகிகளும் அஞ்சலி செலுத்தினார்கள்.

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, புதுவை முதல்-மந்திரி நாராயணசாமி, காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள் தங்கபாலு,

-ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், கிருஷ்ணசாமி, வசந்தகுமார் எம்.பி., ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன், ஞானதேசிகன், தலைமை நிலைய செயலாளர் டி.என்.பிரபாகர், இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் முத்தரசன், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மூத்த தலைவர் ராமகிருஷ்ணன் சுப.வீரபாண்டியன், கவிஞர் வைரமுத்து, வி.ஜி.சந்தோசம் உள்பட பல்வேறு கட்சி தலைவர்களும் அன்பழகன் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்கள்.

நடிகர் ரஜினிகாந்த் அன்பழகன் வீட்டுக்கு வந்து அவரது உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார். திமுக பொதுச்செயலாளர் பேராசிரியர் க.அன்பழகன் உடலுக்கு துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர் ஜெயக்குமார் அஞ்சலி செலுத்தினர்.

Related posts