வடக்கு, கிழக்கு இணைப்பு, தேசிய ரீதியிலான தமிழர் தாயக ஒன்று சேர்ப்பு, சமஷ்டி அடிப்படையிலான ஆட்சிமுறை ஆகியவற்றை முன்வைத்தே பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட உள்ளதாக தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
யாழ். கொற்றாவத்தை கலைவாணி சனசமூக நிலையத்தில் நேற்று (06) மாலை இடம்பெற்ற மக்கள் சந்திப்பு ஒன்றிலேயே அவர் இதனை கூறியுள்ளார்.
அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி வெளிப்படைத் தன்மையும் தமிழ் மக்கள் சார்பான கொள்கைபாற்பட்ட சிந்தனைகளையும் கொணடது என கூறினார்.
சகல சமூகங்களும் ஒற்றுமையுடன் பயணிக்க வழியேற்படுத்துவதாகவும், பொருளாதார ரீதியாக தமிழ் மக்கள் தன்னிறைவு காண பாடுபடுவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.