சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணியின், பிரதான கட்சி அலுவலகம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இன்று (09) காலை, இலக்கம் 815, E.W. பெரேரா மாவத்தை, அதுல்கோட்டை எனும் முகவரியில் இவ்வலுவலகம் திறந்து வைக்கப்பட்டது.
ஐ.தே.க. தலைமையகமான சிறிகொத்த அருகில் திறந்து வைக்கப்பட்ட இவ்வலுவலகம், ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் தலைவரும் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாஸவின் தமையின் கீழ் இன்று காலை திறக்கப்பட்டது.
இவ்வைபவத்தில், கூட்டமைபின் பாராளுமன்ற உறுப்பினர்கள், அக்கட்சியின் ஆதரவாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
ஐக்கிய மக்கள் சக்தியின் கதவுகள் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவிற்காக நேரத்திலும் திறந்திருப்பதாக தெரிவித்த சஜித் பிரேமதாச, கூட்டணியில் இன வெற்றிப் பயணத்திற்கு வலு சேர்க்குமாறும் அழைப்பு விடுத்தார்,அத்துடன் ஐ.தே.கவின் அனுமதியுடனேயே இந்த செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன. ஆகவே, இதனை முன்னோக்கி கொண்டு செல்ல தேவையான பலம் எம்மிடத்தில் உள்ளது. இதை முறியடிக்க எவராலும் முடியாது.
ஏனெனில் ஜனநாயக ரீதியான பயணத்திலேயே நாம் ஒன்றிணைந்துள்ளோம்.
அதேவேளை ஏனைய இனத்தை பிரதிநிதித்துவப்படுத்துபவர்களும் எம்முடன் வந்து இணைந்து கொள்ளலாம். எதற்காகவும் அச்சம் கொள்ளத்தேவையில்லை. எந்த சமயத்திலும் அர்களை பாதுகாக்க நாம் தயாராகவுள்ளோம். ஊழல் மோசடி கப்பம் பெறுபவர்களின் வலைகளில் சிக்கிக்கொள்ள வேண்டாம். தாய்நாட்டை விற்கும் செயற்பாடுகளுக்குள் செல்ல வேண்டாம் எனவும் அவர் கூறினார்.
ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணியின் உத்தியோகப்பூர்வ தேர்தல் பிரசார தலைமை அலுவலகம் இன்று பத்தரமுல்லை – எதுல் கோட்டே பகுதியில் இடம்பெற்றது.
இதில் கலந்துக் கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.