பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை வைத்துக்கொண்டு மக்களின் பிரச்சினைகளை தீர்க்க முடியும் என்றால் அது தவறான எண்ணமாகும். சரியான சந்தர்ப்பத்தில் நிபந்தனைகளுடன் தமிழ் மக்களின் உரிமைகள் தொடர்பில் திடமாகவும் கொள்கை பிடிப்போடும் கேள்வியெழுப்பும் திராணி கொண்ட ஒருவர் அல்லது இருவர் மக்கள் பிரதிநிதிக ளாக இருந்தாலே போதுமானது. அவ்வாறானவர்கள் பாராளுமன்றம் செல்ல வேண்டும் அப்படியானவர்களை அங்கு அனுப்புவதற்கான முயற்சியிலேயே நாம் இறங்கியிருக் கின்றோம் என வடமாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலுக்கு கான கூட்டணியின் வியூகம் மற்றும் ஜெனீவா பேரவை தொடர்பில் வீரகேசரி வார வெளி யீட்டுக்கு அவர் வழங்கிய செவ்வியின் விபரம் இங்கு தரப்படுகிறது..
கேள்வி: நாம் எல்லோரும் ஒருமித்து 15 பேரை ஐந்து வருடங்களுக்காக பாராளுமன்றத்துக்கு அனுப்பினோம். இன்று வரையில் அவர்கள் தமிழர்களுக்கு என்ன செய்திருக்கின்றார்கள்?
நான் பாராளுமன்றத்தில் இருந் இருந்தால் முதலாவது வருடத்திலேயே ஒரு பிரச்சினையை எடுத்தியிருப்பேன். அதாவது அரசாங்கத்தின் முதலாவது வரவு செலவுத் திட்டத்துக்கு ஆதரவளிக்கிறோம். ஆனால் தங்கள் சிறையிலிருக்கும் 300 பேர் வரையான தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் என உறுதி வழங்க வேண்டும் என்று கேட்டிருப்பேன். ஏனென்றால் இது சாத்தியமான விடயமாகும். ஜே.வி.பி காலத்தில் அனைவரையும் அப்போதைய அரசாங்கம் பொது மன்னிப்பில் விடுதலை செய்திருந்தது. ஆகவே இது ஓர் உதாரணமே. இவ்வாறு பல வழிகளில் அரசாங்கத்துக்கு நெருக்குதல்களை செய்திருந்தால் எமது மக்களுக்கு பல விட யங்களைப் பெற்றுக்கொடுத்திருக்கலாம். எதிர்வரும் தேர்தலில் வடமாகாணத்திலிருந்து பாராளுமன்றத்துக்குச் செல்பவர்களில் ஓரிருவர் தவிர மற்ற அனைவரும் தமிழர்கள். அவர்கள் அங்கு சென்று தமிழர்கள் சார்பாக ஒருமித்து சில விடயங்களில் முடிவுகளை எடுக்கக்கூடும். ஒரே கட்சியிலிருந்து அத்தனைப்பேர் சென்று நன்மைகள் கிடைக்கும் என்று எதிர்பார்த்ததில் அப்படி ஒன்றும் நடக்கவில்லை. ஆகவே கொள்கை ரீதியாக திடமாக அரசாங்கத்துக்கு சில விடயங்களை சொல்லக்கூடிய ஓரிருவர் அந்த 15 பேருக்கு இணையானவர்கள் என்பது தான் எனது கருத்து.
மக்களின் நன்மை கருதி எமக்கு எதிரான கருத்துகளை கொண்டிருப்பவர்களிடமும் கூட்டு சேர வேண்டிய அவசியம் இருக்கின்றது. தனித்தனியாக கட்சி ரீதியாக இயங்கும் போது விமர்சனங்கள் அல்லது எதிரான கருத்துகளுக்கு முகங்கொடுக்க வேண்டி வரும். ஆனால் தமிழ் மக்களுக்காக ஒருமித்து பயணிக்கும் போது எத்தகைய முரண்பாடுகளை கொண்டவர்களும் ஒருமித்து செயற்பட முடியும் என்பதையே நாம் உணர்த்தியுள்ளோம். எங்களிடம் இணைந்துள்ள நான்கு பேரும் ஒரு பலமான கூட்ட ணியை அமைத்துள்ளார்கள். ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.
அதை மக்களிடத்தில் பகிரங்கமாக வெளிப்படுத்துவோம். எங்களிடத்திலே இரகசியமான சிந்தனைகள் இல்லை . தற்செயலாக எங்களில் யாராவது ஒருவர் தவறான வழியில் சென்றால் அதற்கு என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ளது.
தமிழ்த் தேசிய கூட்டமைப்பில் ஒரு சிலர் தங்களுக்கு மட்டுமே எல்லாம் தெரியும் என்ற மமதையில்லும் ஆணவத்திலும் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றனர். உதாரணமாக : நல்லாட்சி அரசாங்கத்தின் பிப்ரவரி 3 ஆம் திகதி அதாவது சுதந்திர தினத்துக்கு முதல் நாளன்று எனது வீட்டுக்கு கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் சுமந்ரனும் வருகை தந்திருந்தார்கள். அப்போது சம்பந்தன் என்னிடம் ‘நாளை சுதந்திர தின நிகழ்வுக்கு வருவீர்களா’ என்று கேட்டார். அதற்கு நான் தயவுசெய்து அதைப்பற்றி என்னிடம் கதைக்காதீர்கள் நீங்கள் வேண்டுமானால் செல்லுங்கள் என்றேன். ஏனெனில், 1958 ஆம் ஆண்டு நான் றோயல் கல்லூரியில் மாணவனாக இருந்த போது ஒரு சுதந்திர தின அணிவகுப்பில் கலந்து கொண்ட பிறகு இதுவரை எந்தவொரு நிகழ்விலும் ஏன் நீதியரசர்ராக பதவி வகித்த காலத்திலும் நான் சுதந்திர தின நிகழ்வுகளில் பங்கு கொண்டதில்லை.
ஏனென்றால் இலங்கை தமிழர்களுக்கு இன்னும் சுதந்திரம் கிடைக்கவில்லை என்பதே எனது நிலைப்பாடு. எனது கருத்தை அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. இப்போது ஒரு நல்ல ஆட்சி மலர்ந்திருக்கிறது ஆகவே அவர்களுக்கு எமது ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்றார்கள். ஒத்துழைப்பை நல்குவதில் பிரச்சினையில்லை ஆனால் அவர்கள்டமிருந்து எமது மக்கள் சார்பாக சிலவற்றை பெற்றுக்கொள்வதாக இருத்தல் வேண்டும் என்றேன். ஆனால் அதற்கு அவர்கள் உடன்படவில்லை. ஆகவே கொள்கை ரீதியாக ஒத்துப் போகாவிட்டால் நான் என்ன செய்வது? மக்களுக்கு ஏதாவது நடக்கும் என்ற நம்பிக்கையில் தான் இந்த முதுமையிலும் நான் அரசியலில் பிரவேசித்தேன். ஆனால் அவர்கள் என்னை செயற்பட விடவில்லை .
கேள்வி: சஜித் பிரேமதாஸவை தமிழ்க் கட்சிகள் ஆதரிப்பதை பற்றிய உங்கள் நிலைப்பாடு என்ன?
பதில்: என்னைப்பொறுத்தவரை சிங்களத் தலைவர்கள் அனைவருமே தமிழர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு செவி சாய்ப்பதற்கு தயங்குகின்றனர். தமிழர்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என அவர்கள் உள் மனதில் நினைத்தாலும் கூட தேர்தல்களின் போதோ அல்லது சிங்கள மக்கள் மத்தியில் அதை வெளிப்படுத்துவதில்லை. ஆகவே தமிழர்களுக்கு ஏதாவது செய்வோம் என சிலர் பாசாங்கு செய்வார்கள் சிலர் வெளிப்படையாக ஒன்றும் செய்ய மாட்டோம் என்பார்கள். சஜித்தை பொறுத்த வரை அவர் எப்போதுமே சிங்கள பௌத்த சிந்தனையில் இருப்பவர். அவரது நடவடிக்கைகளும் அவ்வாறே இருக்கின்றன. இடம்பெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் கூட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் வெளிப்படையாக அவருக்கு ஆதரவு என்று அறிவித்ததாலேயே அவர் தோல்வியை தழுவினார். அந்த ஆதரவு அறிவிப்பு சிங்கள மக்களை சிந்திக்கத் தூண்டியது. எனக்குத் தரிந்த வரை அவருக்கு ஆதரவு அளிக்கவிருந்த மக்கள் மற்றும் சிங்களத் தலைவர்கள் இந்த அறிவிப்புக்குப் பின்னர் தமது எண்ணங்களை மாற்றிக்கொண்டனர். ஆகவே அவர் ஒரு சிங்கள பௌத்த அரசியல்வாதியாகவே இருக்கின்றாரே ஒழிய ஒரு பரந்துபட்ட சிந்தனை கொண்ட முழு நாட்டு மக்களையும் ஒன்றாக நோக்கக் கூடிய ஒரு மனிதாபிமானம் கொண்ட பின்னணி அல்லது பின்புலம் அவருக்கு இல்லை.
இத்தனை நாள் வரையில் கூட்டமைப்பின் செயற்பாடுகளில் மக்களுக்கு ஒரு வெறுப்பு ஏற்பட்டுள்ளது. மக்களிடத்தே இவர்கள் பற்றிய எதிர்கருத்துகள் நிலவுகின்றன. ஆகையால் அவர்களுக்கு வாக்களிப்பதை மக்கள் தவிர்ப்பர். எனினும் எமது கட்சி புதியது.
இது ஆரம்பித்து ஒன்றரை வருடங்கள் கூட இல்லை. எனினும் மக்கள் நலம் சார்ந்து சிறந்த கொள்கையுடன் களமிறங்குகிறார், ஆகவே மக்கள் எமக்கு ஆதரவை நல்குவார்களே யானால் எம்மால் வெற்றி பெறலாம். மேலும் அதிக ஆசனங்களைப் பெறுவதற்கு எங் களால் ஆன முயற்சிகளை மேற்கொள்வோம்.
கேள்வி: அவ்வாறு உங்கள் கட்சி வெற்றி பெறும் பட்சத்தில் அரசாங்கத்துடன் இணைந்து செயற்படும் சாத்தியமுள்ளது
பதில்: எந்த கட்சி ஆட்சியமைக்கும் என்பது இதுவரை தெரியாது. ஆனால் எந்த அரசாங்கம் வந்தாலும் எமக்கான முக்கியமான விடயம் தமிழ் மக்களின் எதிர்காலம், வெறுமனே அவர்களுக்கு ஆதரவு அளித்து கொண்டு கைகளை உயர்த்தி காலத்தை கடத்தும் எண்ணம் கிடையாது. அந்த அரசாங்கம் மூலம் தமிழ் மக்களுக்கு கிடைக்க வேண்டிய விடயங்களைப் பெற்று கொண்டு அல்லது அதற்கான வழிவகைகள் ஊடாகவே அவர்களுடன் இணைந்து கொள்ளும் சாத்தியங்களை ஆராய்வோம்.
கேள்வி: வட மாகாணத்தின் முதலமைச்சராக ஐந்து வருடங்கள் இருந்தீர்கள். முதலை அமைச்சராக சாதிக்க முடியாதவற்றை ஒரு பாராளுமன்ற உறுப்பினராக சாதிக்க முடியும் என்று கருதுகிறீர்களா
பதில்: நிச்சயமாக, காரணம் வடமாகாண சபையின் அதிகாரங்கள் மிக மிக குறைந்தவை யாகும். மத்திய அரசாங்கத்தினால் பல வழிகளிலும் அதை கட்டுப்படுத்த முடியும். அப்படி நடந்ததால் தான் என்னால் ஒன்றையும் செய்ய முடியாது போனது. அதை விட எனது சொந்த கட்சியே எனக்கு எதிராக வேலை செய்யும் போது எவ்வாறு இயங்குவது?
பதில்: நிச்சயமாக, காரணம் வடமாகாண சபையின் அதிகாரங்கள் மிக மிக குறைந்தை யாகும். மத்திய அரசாங்கத்தினால் பல வழிகளிலும் அதை கட்டுப்படுத்த முடியும். அப்படி நடந்ததால் தான் என்னால் ஒன்றையும் செய்ய முடியாது போனது. அதை விட எனது சொந்த கட்சியே எனக்கு எதிராக வேலை செய்யும் போது எவ்வாறு இயங்குவது? முதலில் முதலமைச்சரின் நிதியை எனக்குப் பெறமுடியவில்லை . ஒரு வெளிநாட்டு நிறுவனம் வன் னியில் பழங்கள் மற்றும் காய்கறிகளை உற்பத்தி செய்து அதை ஏற்றுமதி செய்யும் திட்ட – மொன்றை கொண்டு வந்தது. அதன் மூலம் பலருக்கும் வேலை வாய்ப்பு கிடைக்கும் நிலைமை இருந்தது. சிறந்த நீர்வளம், சுற்றாடல் மற்றும் காலநிலை என்பன சிறப்பாக இருக்கின்றன என நிறுவனம் மிகவும் திருப்தியடைந்தது. எனினும் அத்திட்டம் ஆரம்பிக் கப்படவே இல்லை. ஏனென்றால் குறித்த காணி வனவளத் திணைக்களத்துக்கு சொந்தமா னது என அரசாங்கம் கூறியது. வரை படத்தின் படி அது எவருக்கும் சொந்தமானதில்லை என்று ஆதாரங்களை காட்டினோம். அது பழையது புதிய வரைபடம் எங்களிடம் உள்ளது என்றார்கள். எப்போது புதிய வரைபடம் வந்தது என்று கேட்டோம். 2007 ஆம் ஆண்டு என் றார்கள். அப்போது தான் யுத்தம் நடந்து கொண்டிருந்ததே எவ்வாறு வரைபடம் கீறப்பட்டது என்று கேட்டதற்கு வானத்திலிருந்து கூகுள் வரைபடம் மூலம் பெற்றோம் என்றார்கள். அது சட்டத்துக்கு புறம்பானது என்று கூறினாலும் இல்லை இடத்தை தர முடியாது என்றார்கள்.
இப்படி எத்தனையோ தடைகள். அரசாங்கத்தின் அதிகாரிகள் எம்மை ஒன்றும் செய்யவிட வில்லை . வெளிநாட்டு அரசியல் பிரமுகர்கள் கூட சில விடயங்களில் தெளிவைப் பெறுவ தற்கு எம்மையே நாடி வந்தார்கள்.
ஏனென்றால் நாங்கள் எமது பிரச்சினையை பலருக்கும் தெரிவித்திருந்தோம். அதற்கும் தடை வந்தது. அவர் மாகாண சபைக்காரர் தானே எவ்வாறு எம்.பிக்களுடன் பேச முடியும் என்றார்கள். அவர்களுடன் கதைத்து எதையும் பெற முடியாது என்ற காரணத்தினாலேயே இருப்பினும் தமிழ் மக்களுக்கு அவ்வாறான ஒரு தீர்வை நாம் பெற வேண்டுமானால் சிங்கள மக்களின் ஏகோபித்த ஆதரவை பெற்றுக்கொண்டவர்களிடமிருந்து மட்டும் தா அதை பெற்றுக் கொள்ள முடியும். அவர்களின் ஆதரவு இல்லாதவர்களிடம் இதை பெற முடியாது. ஆகவே தற்போதைய அரசாங்கத்தின் எண்ணங்கள் எதிர்வரும் பாராளுமன் தேர்தலுக்குப்பின்னர் மாற்றமடையும் என நான் எதிர்பார்க்கின்றேன்.
கேள்வி: உங்கள் கூற்றுப்படி சிங்கள மக்களின் பேராதரவைப் பெற்ற தற்போதை ஜனாதிபதியிடமிருந்து தமிழ் மக்களுக்கான தீர்வு கிடைக்கும் என எதிர்பார்க்கிறீர்களா
பதில்: நாம் எதிர்ப்பார்க்கும் அளவிற்கு தீர்வு கிடைக்கும் என கூற முடியாது. ஆனால் ரணில் விக்கிரமசிங்கவை விட கூடுதலான சில விடயங்களை இவரிடமிருந்து பெற்றுக்கொள்ளலாம் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கின்றது. தற்போதைய உலக அரசியலின் அடிப்படையில் இலங்கை அரசாங்கத்துக்கு பல நெருக்கடிகள் ஏற்படக்கூடிய சாத்தியகூறுகள் உள்ளன. அதையும் எமக்கு சாதகமாகப் பாவித்து பல விடயங்களை அவர்களிடமிருந்து பெறலாம் என்ற நம்பிக்கையும் எமக்குள்ளது.