புத்தளம், சிலாபம், நீர்கொழும்பில் பொலிஸ் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று (18) பிற்பகல் 4.30 மணியிலிருந்து மீள அறிவிக்கும் வரை இவ்வூரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் என பொலிஸ் சட்ட ஒழுங்கிற்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
அந்த வகையில், புத்தளத்தின் 11 பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளிலும், சிலாபத்தின் 7 பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரதேசங்களிலும் நீர்கொழும்பின் கொச்சிக்கடை பொலிஸ் பிரிவிலும் பொலிஸ் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது.
அதற்கமைய,
புத்தளத்தில்
புத்தளம்
ஆனமடு
கற்பிட்டி
கருவலகஸ்வெவ
முந்தளம்
நவகத்தேகம
பல்லம
வனாத்தவில்லு
உடப்பு
நுரைச்சோலை
சாலியவெவ
சிலாபத்தில்
சிலாபம்
தங்கொட்டுவை
கொஸ்வத்தை
மாதம்பை
மாரவில
வென்னப்புவ
ஆரச்சிக்கட்டு
நீர்கொழும்பில்
கொச்சிக்கடை
கொரோனா வைரஸ் உலகம் பூராகவும் பரவி வரும் நிலையில், இலங்கைக்கு வெளிநாட்டிலிருந்து வருகை தரும் பயணிகளை தனிமைப்படுத்துவதற்காக பூசா கடற்படை முகாமில் தனிமைப்படுத்தல் நிலையமொன்று உருவாக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் முகமாக அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள ஒன்றிணைந்த செயற்றிட்டங்களை மேலும் வலுப்படுத்தும் வகையில், பூசா கடற்படை முகாமில் 04 மாடிகளைக் கொண்ட கட்டடமானது தனிமைப்படுத்தலுக்கு தயார்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்தனிமைப்படுத்தல் நிலையத்தில் 136 பேரை தங்க வைப்பதற்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளதோடு, இது தொடர்பில் கடற்படையினருக்கு அவசியமான ஆலோசனைகள், வழிகாட்டல்கள் என்பன கராப்பிட்டி வைத்தியசாலை வைத்தியர் குழாமினால் வழங்கப்பட்டுள்ளன.