கொரோனா எனத் தெரிந்தும் பொய் கூறியவர் மீது வழக்கு!

கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் மற்றுமொரு நடவடிக்கையாக சுற்றுப் பயணங்கள், யாத்திரைகளை முற்றாக தடை செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. தற்போது ஏற்பட்டுள்ள நிலைமைகளை கருதி மக்களை பாதுகாக்கும் வகையில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அலுவலகம் அறிவித்துள்ளது. மக்கள் பெருமளவில் ஒன்றுகூடுவது நோய் பரவுவதற்கு காரணமாகும் என அறிவுறுத்தப்பட்டிருந்தபோதும், வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் குழுக்களாக நாட்டினுள் பயணிப்பதாக தகவல் கிடைத்துள்ளது. உள்நாட்டுப் பிரஜைகளும் சுற்றுப் பயணங்களில் ஈடுபட்டுள்ளனர். இத்தகைய ஒன்றுகூடல்கள் நிறுத்தப்படவேண்டியுள்ளது. மக்கள் நடமாடும் இடங்களில் சுமார் ஒரு மீற்றர் தூரத்தில் தனிநபர் இடைவெளியை பேணுமாறு வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்களை கட்டாயம் பேணுமாறு அரசாங்கம் கேட்டுக்கொண்டுள்ளது. பஸ் மற்றும் புகையிரத சேவை நடைமுறையில் உள்ள சந்தர்ப்பங்களில் இந்த நடைமுறையை பின்பற்றுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. சமூக இடைவெளியை பேணுவதற்காக பஸ் வண்டியிலும் புகையிரதத்திலும் பயணிகள் பயணம் செய்வதற்கான எண்ணிக்கையில் அரைவாசி எண்ணிக்கையானோர் மட்டுமே…

ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதன் நோக்கம்

ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதன் நோக்கம் மக்கள் ஒன்று கூடாமல் இருப்பதை தடுப்பதற்காகவே என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. அதனூடாக கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுப்பதற்கான வாய்ப்புகள் உள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் பிரதி செயலாளர் வைத்தியர் நவீன் த சொய்சா தெரிவித்துள்ளார். ஊரடங்குச் சட்டம் அமுலில் உள்ள காலத்தில் வைரஸ் தாக்கத்திற்கு உள்ளாகி இருக்கக்கூடிய நபர்கள் சுய தனிமைப்படுத்தலுக்கு உள்ளாகக் கூடிய சந்தர்ப்பம் இருப்பதாக பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் விசேட வைத்தியர் பபா பலிஹவடன தெரிவித்துள்ளார். ——- கொரோனா வைரஸ் (கொவிட் 19) நாடு முழுவதும் பரவுவதை தடுப்பதற்கான பூரண திட்டம் ஒன்றை அரசாங்கம் இதுவரை முன்னெடுக்கவில்லை என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அறிக்கை ஒன்றை வெளியிட்டு அவர் இதனைத் தெரிவித்துள்ளார். பாரிய நிதி நெருக்கடிக்கு…