Month: March 2020
பழைய காதலரை மணந்திருந்தால் நானும் சாவித்திரி ஆகியிருப்பேன் சமந்தா..!
கேன்ஸ் திரைப்பட விருது விழா ஒத்திவைப்பு
ஏழு பேர் விடுதலை மீண்டும் ஓர் ஏமாற்றம் !
7 பேர் விடுதலை விவகாரம் தொடர்பாக சட்டப்பேரவையில் அமைச்சர் சி.வி.சண்முகம் விளக்கம் அளித்தார். சட்டப்பேரவையில் இன்று சட்டம், நீதிமன்றங்கள் மற்றும் சிறைச்சாலைகள் துறை மீதான மானிய கோரிக்கை மற்றும் விவாதம் நடைபெற்றது. அமைச்சர் சி வி சண்முகம் துறை ரீதியான விவாதங்களுக்கு பதிலளித்து பேசினார். அப்போது 7 பேர் விடுதலை தீர்மானம் குறித்து ஆளுநரின் செயலருக்கு, தமிழக அரசு அனுப்பிய கடிதத்திற்கு பதில் வந்துள்ளது என சி.வி.சண்முகம் கூறினார். 7 பேர் விடுதலை தொடர்பாக ஜெயின் கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் பல்வேறு புலனாய்வு அமைப்புகள் உள்ளடக்கிய ஒரே அமைப்பு விசாரணை நடத்திவருகிறது. விசாரணை அறிக்கை கிடைத்த பிறகே முடிவு எடுப்பதாக ஆளுநர் அந்த கடிதத்தில் கூறியுள்ளார் என கூறினார்.