நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிப்பதாகக் கூறப்படும் கபசுரக் குடிநீர் சமீபமாக அதிக அளவில் தயாரிக்கப்பட்டு சித்த மருத்துவக் கடைகளில் விற்கப்பட்டு வருகிறது.
சென்னை திருவான்மியூரில் உள்ல இம்காப்ஸ் எனப்படும் இந்திய மருத்துவர்கள் கூட்டுறவு மருந்து செய் நிலையம் மற்றும் பண்டக சாலைகளில் கபசுர குடிநீர் அதிக அளவில் தயாரிக்கப்பட்டு வருகிறது.
இந்த கபசுர குடிநீர் ஆடாதொடை, அக்ரஹாரம், கற்பூரவள்ளி, திப்பிலி உள்ளிட்ட 15 மூலிகைகளால் தயாரிக்கப்பட்டு வருவதாக இம்ப்காப்ஸ் செயலாளர் மருத்துவர் தனியார் தொலைக்காட்சிக்குத் தெரிவித்துள்ளார். இது கொரோனா நோய் அறிகுறிகளைக் கட்டுப்படுத்தும் மருந்து மட்டுமே என்றும் அவர் கூறியுள்ளார்.
இந்த கபசுரக் குடிநீர 40 முதல் 50 மிலிவரை பெரியவர்கள் எடுத்துக் கொள்ளலாம். காலையில் வெறும் வயிறில் எடுத்துக் கொள்ளலாம், காய்ச்சல், உள்ளிட்ட நோய் குறிகுணங்கள் அதிகமாக இருந்தால் மாலை நேரத்திலும் ஒருவேளை எடுத்துக் கொள்ளலாம்.
இது போல ஒருவாரம் தொடர்ந்து எடுத்துக் கொள்ள வேண்டும். சிறியவர்களுக்கும் 15 முதல் 20 மிலி வரை கொடுக்கலாம், என்றும் தனியார் தொலைக்காட்சிக்கு இம்ப்காப்ஸ் செயலாளர் மற்றும் மருத்துவர் தெரிவித்துள்ளார்.