இந்தியாவில், கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், இனிதான் நாடு கவனமாக இருக்க வேண்டும் என்பதை உணர்த்தியுள்ளது மற்ற நாடுகள்.
அமெரிக்காவை போல் தற்போது இந்தியாவிலும் கொரோனா தொற்று வேகம் எடுக்க தொடங்கியுள்ளது. அமெரிக்கா, இத்தாலி ஆகிய நாடுகளில் இரண்டு வாரங்களுக்கு பின்தான் கொரோனா வைரஸ் வேகமாக பரவ தொடங்கியது. அதே போல் தற்போது இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது.
தொற்றுநோயின் மோசமான நிலையைக் கையாளும் பல நாடுகளை விட இந்தியாவில் கொரோனா பாதிப்பு விகிதம் மெதுவாக உள்ளது. மார்ச் 8 அன்று, அமெரிக்காவில் இரண்டு நாட்களில் 541 வழக்குகள் பதிவாகியுள்ளன, மேலும் இந்த எண்ணிக்கை 994 பாதிப்புகள் என இரு மடங்காக அதிகரித்தது. இருப்பினும், கடந்த வாரத்தில், இது 75 சதவீதம் அதிகரித்துள்ளது.
கடந்த வாரத்தில் இந்தியாவில் கொரோனாபாதிப்புகள் இந்தியாவில் இரட்டிப்பாகிவிட்டன, கடந்த ஏப்ரல் 2ந்தேதி 328 பாதிப்புகள் மற்றும் 12 இறப்புகள் பதிவாகி இருந்தன . மத்திய சுகாதார அமைச்சகத்தின் கூற்றுப்படி, இப்போது 2,069 வழக்குகள் உள்ளன, 53 இறப்புகள் மற்றும் 156 குணப்படுத்தப்பட்டுள்ளன .மாநிலங்களின் அதிகாரிகள் தகவ்ல் படி 2,500 க்கும் அதிகமான பாதிப்புகளும் எண்ணிக்கையையும், உயிரிழப்பு எண்ணிக்கை 56 ஆகவும் உள்ளது.
மராட்டியத்தில் 335 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். கேரளாவில் 286 பேர் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டில் 309 மற்றும் டெல்லியில் 219, கர்நாடகாவில் 124, உத்தரபிரதேசத்தில் 113, தெலுங்கானாவில் 107, ராஜஸ்தானில் 133, மத்திய பிரதேசத்தில் 99, குஜராத்தில் 87, ஆந்திராவில் 132க்ஷ்`க்ஷ்`, ஜம்மு காஷ்மீரில் 62, பஞ்சாபில் 46,அரியானாவில் 47, மேற்கு வங்கத்தில் 53, பீகாரில் 24, சண்டிகரில் 16, லடாக்கில் 13 வழக்குகள் பதிவாகியுள்ளன. அசாமில் 5, சத்தீஸ்காரில் 9, கோவாவில் 5, இமாச்சல பிரதேசத்தில் 3, ஜார்க்கண்டில் 1, மணிப்பூர் மற்றும் மிசோரத்தில் 1, ஒடிசாவில் 4, புதுச்சேரியில் 3, உத்தரகாண்டில் 7 பாதிப்புகள் பதிவாகியுள்ளன.
உலகளவில், கொரோனா வைரஸ் தொற்றுநோய்களின் எண்ணிக்கை 10 லட்சத்தை எட்டியுள்ளது, 50,000 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து உள்ளதாக ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
டெல்லி நிஜாமுதீன் சம்பவத்திற்கு பிறகு கொரோனா பாதிப்பு எண்ணிக்கை இந்தியாவிலும்,தமிழகத்திலும் அதிகரித்து உள்ளது. கடந்த 2 நாட்களில் தமிழகத்தில் 200 கொரோனா வைரஸ் பாதிப்புகள் அதிகரித்து உள்ளது.
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை இந்த வேகத்தில் அதிகரித்தால், ஊரடங்கு 21 நாட்கள் முடிவில் பத்தாயிரத்தை கடக்கும் என்று கணிக்கப்பட்டு உள்ளன. அவற்றின் கூற்றுப்படி கடந்த ஒரு வாரத்தில் மட்டும் கொரோனா தொற்றின் எண்ணிக்கை இரட்டிப்பாகியுள்ளது. மேலும், தொற்றின் வேகம் இப்போது குறையுமா என்று இப்போது கண்ணிக்க இயலாது என்று சுட்டிக்காட்டியுள்ளது.
பிரதமர் மோடி நேற்று வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆற்றிய உரையில் கொரோனாவுக்கு எதிரான போர் இப்போதுதான் தொடங்கி இருக்கிறது. இதில் இருந்து நாம் ஒருபோதும் பின்வாங்கிவிடக்கூடாது; எந்த தவறும் நடந்துவிடக்கூடாது. கொரோனாவுக்கு எதிரான போர் சுகாதார பணியாளர் கள், போலீசார், அரசாங்கத்துக்கு மட்டுமானது என்று யாரும் கருதிவிடக்கூடாது. ஒவ்வொருவரும் இதை தனக்கு எதிரான போராக கருதவேண்டும் என மக்களை கேட்டு கொண்டார்.
மார்ச் 24 மாலை, கொரோனா வைரஸின் “சமூக பரவலை” தடுக்க பிரதமர் நரேந்திர மோடி நாடு தழுவிய 21 நாள் ஊரடங்கை அறிவித்தார். மார்ச் 24 மற்றும் ஏப்ரல் 1 க்கு இடையில், கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை இருமடங்காக அதிகரித்துள்ளது – மார்ச் 25 அன்று 606 பாதிப்பாக இருந்தது. முதல் ஏப்ரல் 1 அன்று 1,637 ஆக அதிகரித்தது.
இந்தியாவில் முதல் 200 நோயாளிகளுக்கு கொரோனா ஏற்பட மிக அதிக நாட்கள் எடுத்தது. பிப்ரவரி 15 ஆம் தேதி இந்தியாவில் முதல் நபருக்கு கேரளாவில் கொரோனா ஏற்பட்டது. அதன்பின் மார்ச் 20ஆம் தேதிதான் 200வது நபருக்கு கொரோனா ஏற்பட்டது. அதாவது 200 பேருக்கு கொரோனா ஏற்பட 35 நாட்கள் ஆனது. ஆனால் திடீர் என்று வேகம் எடுத்து இருக்கும் கொரோனா, நேற்று ஒரே நாளில் மட்டும் 237 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பிப்ரவரி 15ல் இருந்து இந்தியா ஆயிரம் நோயாளிகளை தொட எடுத்துக் கொண்ட காலம் சரியாக 45 நாட்கள். மார்ச் 29ம் தேதி தான் இந்தியா ஆயிரம் நோயாளிகளை தொட்டது.
மற்ற உலக உலக நாடுகளை விட இது மெதுவானது என்று மத்திய அரசு கூறுகிறது. ஆனால் உண்மையில் உலகம் முழுக்க இதே நிலைதான். முதலில் கொரோனா வைரஸ் மிகவும் மெதுவாக பரவும், அதன்பின் திடீர் என்று வேகம் எடுத்து, வரிசையாக பலரை தாக்கும். கொத்து கொத்தாக பலர் மருத்துவமனையில் சேர்வார்கள்.
அதேபோல் தான் அமெரிக்காவில் முதல் நபருக்கு கொரோனா ஏற்பட்டது பிப்ரவரி 15. மார்ச் 15ம் திகதி சரியாக ஒரு மாதத்தில் அங்கு ஆயிரம் பேருக்கு கொரோனா வந்தது.அதன்பின் வேகம் எடுத்த தொற்று கொத்து கொத்தாக மக்களை மருத்துவமனைகளில் சேர வைத்தது.
அதில், 20 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டதில் இருந்து 85 ஆயிரத்தை தொட எடுத்துக் கொண்ட நாட்கள் வெறும் 6 நாட்கள்தான். சரியாக ஒரு மாதம் கழித்து அங்கு கொரோனா வேகம் எடுத்தது. இதுபோன்றுதான் இத்தலியிலும் நிகழ்ந்தது.
கொரோனா என்பது ஒருவர் மூலம் இன்னொருவருக்கு தொடுதல் மூலம் பரவ கூடியது. அதேபோல் இந்த வைரஸ் அறிகுறி இல்லாமலே பரவ கூடியது. இதுதான் இந்த வைரஸ் தாக்குதல் குறிப்பிட்ட காலத்தில் வேகம் எடுக்க காரணம். உதாரணமாக ஏ என்ற நபருக்கு கொரோனா வைரஸ் இருந்தும் அறிகுறி இல்லை. அவர் பல இடங்களுக்கு செல்கிறார். பலரை சந்திக்கிறார். அவருக்கு தெரியாமல் அவர் பலருக்கு கொரோனாவை பரப்புவார்.இவர் மூலம் ஒரே நாளில் பலருக்கு கொரோனா ஏற்பட வாய்ப்புள்ளது. இதுதான் ஒரே நாளில் வேகமாக உயர காரணம் ஆகும். எனவே இந்தியர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய காலம் இதுதான் என்பதை மற்ற நாடுகள் உணர்த்துகின்றன.