சில இந்திய ஊடகங்கள் போடும் தப்புக்கணக்குகள்..! இன்றைய இந்தியா..!

கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த இந்தியாவில் 21 நாள் நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. வங்கிகள் போன்ற பல அத்தியாவசிய சேவைகள் இயங்கி வருகின்றன. இந்த சூழ்நிலையில், குஜராத்தில் உள்ள பாங்க் ஆப் பரோடாவின் கிளையிலிருந்து ஒரு வீடியோ இணையத்தில் வெளிவந்துள்ளது. வீடியோவில், ஒரு காசோலையை அயர்ன் பாக்ஸ் பயன்படுத்தி காசோலையை கிருமி நீக்கம் செய்வதைக் காணலாம்.

இந்த வீடியோவை ஆனந்த் மஹிந்திரா என்பவர் தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் ஒரு நபர் ஒரு காசோலையை ஒரு ஜன்னல் வழியாக காசாளரிடம் கொடுக்கிறார். வங்கி கேசியர் ஒரு இடுக்கியை பயன்படுத்தி காசோலையை வாங்குகிறார்.

பின்னர் அவர் காசோலையை தனது மேஜையில் வைத்து, அதன் மீது ஒரு நீராவி அயன் பாக்ஸ்-யை வைத்து தேய்கிக்கிறார்.ட் அதில் இருக்கும் வைரஸை கிருமி நீக்கம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

இதை, ஆனந்த் மஹிந்திரா இந்த வீடியோவை “எனது # வாட்ஸ்அவொண்டர்பாக்ஸில் கேசியரின் தொழில்நுட்பம் பயனுள்ளதா என்று எனக்குத் தெரியவில்லை என கூறி உள்ளார்.டுவிட்டரில் இது குறித்து பல்வேறுவகையான கருத்துக்கள்தெரிவிக்கப்பட்டு உள்ளது.

——-

26 நர்சுகள், 3 டாக்டர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதியான நிலையில், மும்பையிலுள்ள பிரபல மருத்துவமனை மூடப்பட்டு உள்ளது.

நாட்டில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. இதனை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. நாட்டிலேயே அதிக அளவாக மராட்டியத்தில் 781 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. 45 பேர் பலியாகி உள்ளனர்.

இந்த நிலையில், மும்பை மாநகராட்சி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளது. அதில், மும்பையில் உள்ள பிரபல ஒக்கார்ட் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் கடந்த ஒரு வாரத்தில் 26 நர்சுகள், 3 டாக்டர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. அதனால், அந்த மருத்துவமனைக்குள் செல்லவோ அல்லது மருத்துவமனையில் இருந்து வெளியே செல்லவோ யாருக்கும் அனுமதி இல்லை.

கொரோனா உறுதி செய்யப்பட்ட ஒவ்வொருவருக்கும் அடுத்தடுத்து நடத்தப்படும் இரு பரிசோதனைகளில் தொற்று இல்லை என தெரியும்வரை இந்த தடை தொடரும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதுபற்றி மாநகராட்சி கூடுதல் ஆணையாளர் சுரேஷ் ககானி கூறும்பொழுது, மருத்துவமனையில் இவ்வளவு பேருக்கு எப்படி பாதிப்பு பரவியது என்பது பற்றி தலைமை சுகாதார அதிகாரியின் கீழ் அமைக்கப்பட்ட குழுவினர் விசாரணை மேற்கொள்வார்கள். இது துரதிர்ஷ்டவசம் நிறைந்தது. அவர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்க வேண்டும் என கூறியுள்ளார்.

——-

இந்தியாவில் கொரோனா வைரசின் தாக்கம் இன்றைய நிலவரப்படி 4247 ஆக உள்ளது. சீனாவை விட மக்கள் நெரிசல் மிக்க இந்தியாவில் கொரோனா பரவினால், 30 கோடி பேர் பாதிக்கப்படுவார்கள், 20 முதல் 25 லட்சம் பேர் வரை இறப்பார்கள் என்று சில வல்லுனர்கள் அச்சம் தெரிவித்தனர். அமெரிக்கா, சீனா, இத்தாலி, ஸ்பெயின் போன்ற நாடுகளை ஒப்பிடும் போது, இந்தியாவில் கொரோனாவின் வேகம் மிகவும் குறைவு என்றே சொல்லலாம்

இதற்கு மூன்று காரணங்கள் உள்ளன. இவைகள் தான் இந்தியாவில் இருக்கும் மக்களை கொரோனாவில் இருந்து பாதுகாத்து என்று கூறுகிறார் டாக்டர் நாரேந்திர குமார் வர்மா.

எய்ம்ஸ் மருத்துவமனையில் பல ஆண்டுகளாக ஆய்வு நடத்திய நரேந்திர குமார் வர்மா இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் குறித்து கூறியதாவது:-

இந்திய மக்களுக்கு பொதுவாக அதிக நோய் எதிர்ப்பு சக்தி உண்டு. அளவுக்கு அதிகமான நுண் கிருமிகள் உடலில் கலந்திருப்பதே நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக காரணம்.ஐரோப்பிய, அமெரிக்க நாடுகளை ஒப்பிடுகளையில், இந்தியாவில் ஆஸ்துமா, எய்ட்ஸ், மலேரியா போன்ற நோய்கள் கடுமையாக பாதிப்பை ஏற்படுத்தின.

பலவிதமான வைரஸ், பாக்டீரியாக்கள், ஒட்டுண்ணிகளால் இந்தியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கெட்டதிலும் ஒரு நன்மை என்பது போல, அதிக வைரஸ் பாதிப்பு காரணமாக, இந்தியர்களின் உடலில் குறிப்பிட்ட T-செல்கள் உருவாகின்றன.இதை T-உயிரணுக்கள் என்று சொல்லலாம். அந்நிய வைரஸிடமிருந்து, நம் உடலை பாதுகாப்பதில் போர் வீரரனைப் போன்று, T-செல்கள் செயல்படுகின்றன. வெளியில் இருந்து ஏதேனும் புதுவிதமான வைரஸ்களநம் உடலில் நுழைந்தால்,T-செல்கள் தாக்கி அழித்துவிடும்.

இதன் காரணமே கொரோனா இந்தியாவில் தீவிரமாக பரவவில்லை. சுத்தம், சுகாதாரத்தோடு வாழும் ஐரோப்பா, அமெரிக்க நாட்டினருக்கு இது போன்ற T-செல்கள் குறைவாக இருப்பது பின்னடைவு தான், வைரஸ் நோய்களில் இருந்து மீள்வதற்கு இந்தியாவில், குளோரோகுயின், ஹைட்ராக்ஸோ குளோரோகுயின் மருந்துகளை அதிகள் அளவில் பயன்படுத்தியுள்ளனர்.

இந்த மருந்துகளின் வீரியம், இன்றளவும் இந்தியர்களின் உடலில் உள்ளது. இது இப்போது அவர்களுக்கு எதிர்பாரத பலனை அளித்துள்ளது.

இந்தியர்கள் உணவில் பயன்படுத்தும் மசால் மற்றும் நறுமணப் பொருட்கள் போன்றவை தான், மஞ்சள், மிளகு, சீரகம், பூண்டு, இஞ்சி, திப்பிளி, ஏலக்காய், கிராம்பு, புதினா, ஜாதிக்காய், கருஞ்சீரகம், இப்படி பல இருக்கின்றன.இவை அனைத்திற்கும் தனி தனி மருத்துவ குணங்கள் இருக்கின்றன. ஆயுர்வேத இந்திய மருத்துவ முறைகளில், நறுமணப் பொருட்களின் பங்களிப்பை யாராலும் மறுக்க முடியாது, பயன்படுத்தப்படும் பலவிதமான நறுமணப் பொருட்கள், உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை கொடுக்கின்றன.

இதை அலோபதி மருத்துவர்கள் கூட மறுக்கமாட்டார்கள், டெங்கு பரவிய போது, நிலவேம்பு குடிநீர் பயன்பட்டது. அதே போன்று இப்போது இந்தியாவில், நோய் எதிர்ப்பு சக்தியை கூட்டுவதற்கு கபசூர குடிநீர் வந்துவிட்டது. பல வித இந்திய நறுமணப் பொருட்களை கொண்டு தயாரானது தான் இந்த கபசூர குடிநீர்.

அமெரிக்கா மற்றும் ஐரோப்பா நாட்டவர்கள் சீனர்களுடன் ஒப்பிடும் போது, அன்றாட உணவில் இந்தியர்கள் சேர்த்து கொள்ளும்,பொருட்கள் கொரோனாவில் இருந்து அவர்களை பாதுகாக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை.

உடலுக்குன் நோயேதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும், மரபணுக்களின் அமைப்புதான் இம்முனி சிஸ்டம் (Immunue Syste) வைரஸ்களை அழித்து நம்மை பாதுகாக்கும் இம்முனி சிஸ்டத்தின் அங்கம் ஹெச்.எல்.எ ஜீன், இந்த மரபணுக்களின் வேலை என்ன என்றால், உடலில் அந்நிய வைரஸ் நுழைந்தால், ஹெச்.எல்.எ மரபணுக்கள் அடையாளம் கண்டதுடன், உடனடியாக இம்முனி சிஸ்டத்தை உஷார் படுத்துவிடுகிறது.

அதை தொடர்ந்து T-செல்கள் போர் வீரனாக செயல்புரிந்து, அந்நிய வைரஸ்களை அழிக்கும், இதில் ஹெச்.எல்.இ மரபணுக்களின் பங்கு மிகவும் முக்கியம்.பல வித வைரஸ் கிருமிகளால், பாதிக்கப்பட்டுள்ள இந்தியர்களின் உடலில், சில குறிப்பிட்ட வகையான ஹெச்.எல்.எ அணுக்கள், அதிக அளவில் இருக்கின்றன.அது போன்ற ஹெச்.எல்.எ மரபணுக்கள், ஐரோப்பிய, அமெரிக்க, சீன மக்களின் இம்முனி சிஸ்டத்தின் குறைவு தான், இதனால் அவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கிறது என கூறினார்.

Related posts