ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள தொழிலாளர்கள், ஆதரவற்றோருக்கு பல்வேறு தொண்டு அமைப்புகள், அரசியல் கட்சிகள் சார்பில் உதவிகள் செய்யப்படுகின்றன. ஊராட்சிப் பகுதிகளில் வீடு வீடாக கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.
கரோனா பரவலைத் தடுக்க ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் தொழிலாளர்கள், ஆதரவற்றோர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு பல்வேறு அமைப்புகள், அரசியல் கட்சிகள் உதவி வருகின்றன.
நெல்பேட்டை, குப்புபிள்ளை தோப்பு பகுதிகள் தொழிலாளர்கள், மதுரையின் புறநகர் பகுதிகளில் உணவின்றி அவதிப்படும் ஊனமுற்றவர்களுக்கு வழக்கறிஞர் வாஞ்சிநாதன் தலைமையிலான கரோனா உதவி குழு உணவுப் பொருள் வழங்கியது.
இதில் வழக்கறிஞர் ராஜேந்திரன், சமூக சேவகர்கள் ஷாகுல், சீனி, காஜாநஜ்முதீன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இக்குழுவினர் அடுத்தக்கட்டமாக ஆட்டோ தொழிலாளர்களுக்கு உதவ திட்டமிட்டுள்ளது.
துப்புரவு பணியாளர்களுக்கு உதவி மதுரை கிழக்கு திமுக எம்எல்ஏ பி.மூர்த்தி திருமோகூர், புதுதாமரைப்பட்டி ஊராட்சி துப்புரவு பணியாளர்களுக்கு அரிசி, முகக்கவசம், கையுறை ஆகியவற்றை வழங்கினார்.
இதில் மாவட்ட ஊராட்சித் தலைவர் சூரியகலா கலாநிதி, திருமோகூர் ஊராட்சி மன்ற தலைவர் ஏபிஆர், மதுரை கிழக்கு ஊராட்சி ஒன்றிய தலைவர் மணிமேகலை, துணைத் தலைவர் ஏ.பி.வி.பாலாண்டி, ஒன்றிய கவுன்சிலர்கள் ஒன்றிய கவுன்சிலர்கள் முத்துராமலிங்கம், பிச்சை, போஸ், மாவட்ட கவுன்சிலர் வடிவேல்முருகன் மற்றும் ஊராட்சி உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
கபசுர குடிநீர்
திருமோகூர் ஊராட்சி மன்றத்தில் அனைத்து வீடுகளுக்கும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் கபசுர குடிநீர் வழங்கப்பட்டது. ஊராட்சி முதல் வார்டில் கபசுர குடிநீர் வழங்குவதை ஊராட்சி தலைவர் ஏ.பி.ஆர்.அண்ணாமலை தொடங்கி வைத்தார். ஊராட்சி உறுப்பினர் சசிகுமார், செந்தில்வேல்முருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பாஜக உதவி
பழங்காநத்தம் மண்டல் பாஜக சார்பில் பைக்காரா, பழங்கானத்தம் மெயின்ரோடு , அக்ரஹாரம், பசும்பொன்நகர், மேலத்தெரு பகுதி ஏழைகளுக்கு மதுரை மாநகர் மாவட்ட பாஜக முன்னாள் தலைவர் ராஜரத்தினம் வழங்கினார்.
இதில் மாவட்ட துணைத் தலைவர் கராத்தே பி.ராஜா, மண்டல் தலைவர் பிரகாஷ், நிர்வாகிகள் இல.ரமேஷ், எம்.ஜி பாரதிராஜ் , எம்.கே.மணிவண்ணன், இருள்ஐயா, பி.தனசேகரன், ஜெயக்குமார், ஏ.ஜே. ராஜன், ஆறுமுகம், ஆனந்த், கணேசன், ராமச்சந்திரன், லோகநாதன், நாராயணன், புவனேஸ்வரி நாராயணன், இன்பராஜ், நெப்போலியன், ஆலயம் பாண்டி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.