சன் ரிவி போடும் படங்கள் புதிதாக இருந்தால் வெற்றி பெறலாம்.. ஏராளம் படங்கள் திரையிட முடியாமல் இருக்கின்றன. அவற்றை ஒளிபரப்பலாம்.. அதைவிடுத்து பார்த்து களைத்த படங்களை போட்டு அரைத்த மாவை அரைக்க முயல்கிறது சன் ரிவி.
இது குறித்த செய்தி..:
முன்னணி தமிழ்த் தொலைக்காட்சிகளில் முதல் முறையாக சன் டிவி ஒரு புதிய முயற்சியைக் கையில் எடுத்துள்ளது.
கரோனா அச்சுறுத்தலால் இந்தியா முழுக்கவே 21 நாட்கள் ஊரடங்கு அமலில் உள்ளது. மேலும், ஊரடங்கு இந்த மாத இறுதி வரை நீட்டிக்கப்படும் எனத் தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதனால் பொதுமக்கள் அனைவருமே வீட்டிற்குள்ளேயே இருக்கிறார்கள்.
இதனைப் பயன்படுத்தி பல்வேறு தொலைக்காட்சிகளும் புதிய படங்களையும், பழைய ஹிட்டடித்த படங்களையும் தொடர்ச்சியாக ஒளிபரப்பு செய்து வருகிறார்கள். இந்நிலையில் வரும் ஏப்ரல் 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில் ஒரு புதிய முயற்சியைக் கையில் எடுத்துள்ளது சன் டிவி.
என்னவென்றால், தொடர்ச்சியாக 5 படங்களை ஒளிபரப்ப முடிவு செய்துள்ளது. ஏப்ரல் 13-ம் தேதி காலை 9.30 மணிக்கு ‘கத்திசண்டை’, 12 மணிக்கு ‘ரமணா’, 3 மணிக்கு ‘மீசைய முறுக்கு’, 6,30 மணிக்கு ‘சீமராஜா’ மற்றும் 9.30 மணிக்கு ‘வேலையில்லா பட்டதாரி’ ஆகிய படங்கள் ஒளிபரப்பப்படுகின்றன.
ஏப்ரல் 14-ம் தேதி காலை 9.30 மணிக்கு ‘கலகலப்பு 2’, 12.30 மணிக்கு ‘காப்பான்’, 3.30 மணிக்கு ‘டகால்டி’, 6.30 மணிக்கு ‘தர்பார்’ மற்றும் இரவு 9.30 மணிக்கு ‘நண்பேன்டா’ ஆகிய படங்கள் ஒளிபரப்பாகின்றன. சன் டிவி தொடங்கி 27 ஆண்டுகள் ஆவதை முன்னிட்டு இந்தச் சிறப்புக் கொண்டாட்டத்தை முடிவு செய்துள்ளது.
இது தொடர்பான விளம்பர முன்னோட்டங்கள் தொடர்ச்சியாக சன் டிவியில் ஒளிபரப்பப்பட்டு வருகின்றன. மேலும், படங்கள் ஒளிபரப்புக்கென்று தொடங்கப்பட்ட சேனல்களைத் தாண்டி இதர சேனல்களில் இப்படியான ஒளிபரப்பு இதுவரை நடந்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.