வீட்டிலிருந்தவாறு மட்டுமே நாம் மேற்கொள்ளும் சம்பிரதாயங்களை நாம் எதிர்காலத்திலும் முன்னெடுக்க முடியும். அது மிகவும் எளிமையாக புதுவருட மகிழ்ச்சியை வரவேற்பதாகும். அந்த எளிமையானது மக்களின் வாழ்க்கைக்கு சிறந்தது என்பதை நமது வரலாறுகள் உணர்த்துகின்றன என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ விடுத்துள்ள சித்திரை புத்தாண்டு வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார்.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ விடுத்துள்ள வாழ்த்துச் செய்தி பின்வருமாறு:
இம்முறை புதுவருட வாழ்த்துக்களை தீர்க்கமான எச்சரிக்கையுடன் தெரிவிக்க வேண்டிய நிலையே உள்ளது.
நாட்டு மக்கள் இம்முறை புதுவருடத்தை சுகாதாரத்துறையின் எச்சரிக்கை மற்றும் பரிந்துரைகளுக்கு இணங்கவே அனுஷ்டிக்க வேண்டியுள்ளது.
மக்கள் நலனை கருத்தில் கொண்டு நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள சட்ட திட்டங்கள் மற்றும் தடைகளை புதுவருட தினங்களிலும் செயல்படுத்த வேண்டியுள்ளது என்பதை நினைவு கூறுகின்றேன்.
தமிழ், சிங்கள புது வருடமானது இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தையும் சக வாழ்வையும் ஏற்படுத்துகிறது. ஒரே நேரத்தில் பணிபுரியும் எமக்கு மக்களின் ஒரே நிலைப்பாட்டை காட்ட முடியும்.
வீட்டிலிருந்தவாறு மட்டுமே நாம் மேற்கொள்ளும் சம்பிரதாயங்களை நாம் எதிர்காலத்திலும் முன்னெடுக்க முடியும்.
அது மிகவும் எளிமையாக புதுவருட மகிழ்ச்சியை வரவேற்பதாகும். அந்த எளிமையானது மக்களின் வாழ்க்கைக்கு சிறந்தது என்பதை நமது வரலாறுகள் தெரிவிக்கின்றன.
பல்லாயிரம் வருடங்களாக நாம் சிதையாமல் மேற்கொண்டு வரும் எமது சம்பிரதாயங்களுக்குள் வெளிப்படும் உணர்வுகளின் பெறுமதியை இன்று எமக்கு ஏனைய சந்தர்ப்பங்களை விட தெளிவாக உணர முடிகிறது.
இன்று முழு உலகையும் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கியிருக்கும் கொடிய வைரஸை நாட்டில் சாத்தியமாக எதிர்கொள்வதற்கு மக்களுக்கு இடையிலான அந்த பிணைப்பும் கலாசார பின்புலமும்உறுதுணையாகி உள்ளது.
இந்த நிலையில் இம்முறை புதுவருடத்தை எளிமையாக உங்கள் குடும்ப உறுப்பினர்களுடன் மட்டும் இணைந்து கொண்டாடுமாறு அனைவரையும் தயவுடன் கேட்டுக் கொள்கின்றேன்.