‘லாக்டவுன்’ எனும் முன்று நிமிட குறும்படத்தை, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆண்ட்ரியா வெளியிட்டுள்ளார்.
கொரோனா ஊரடங்கால் மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி உள்ள நிலையில் திரைப்பிரபலங்களில் சிலர் வீட்டில் இருந்தபடியே ஆல்பம், குறும்படம் என நடித்து வருகின்றனர். நடிகர் ஆதவ் கண்ணதாசன், ‘லாக்டவுன்’ என்ற குறும்படத்தை இயக்கி உள்ளார். இதில் ஆண்ட்ரியா முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.
ஆண்ட்ரியா கூறுகையில், ஊரடங்கு ஆரம்பிக்கப்பட்ட சமயத்தில் இந்த குறும்படம் இறித்து ஆதவ் கண்ணதாசன் என்னிடம் சொன்னார். இது முழுக்க முழுக்க ஐபோனில் படம் பிடிக்கப்பட்டது. இப்போது நடந்து கொண்டிருக்கும் விஷயத்தைப் பொழுதுபோக்கு அம்சங்களுடன் சொல்ல முயற்சி செய்திருக்கிறோம் என்றார். மேலும் இந்த படம் நாங்கள் எதிர்பார்த்ததை விட சிறப்பாக வந்திருக்கிறது என்று கூறியுள்ளார்.
‘லாக்டவுன்’ எனும் முன்று நிமிட குறும்படத்தை, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆண்ட்ரியா வெளியிட்டுள்ளார்.
இந்த படத்தில் இளம் பெண்ணான ஆண்ட்ரியா ஜெரேமியா, தனது வீட்டில் தனியாக பியானோ வாசித்துக்கொண்டும், பாடல் கேட்டுக்கொண்டும், புத்தகம் படித்துக்கொண்டு இருக்கிறார். இந்த லாக் டவுனுக்கு மத்தியில் பிறந்தநாள் விழாவில் கலந்து கொள்ளத் தயாராகிறார். அவர் கிளம்பும்போது அவரைச்சுற்றி பல அமானுஷ்ய விஷயங்கள் நடப்பது போல் தெரிகிறது. அதைக்கண்டு அச்சப்படும் ஆண்ட்ரியா, ஒரு வழியாக புறப்பட, கதவைத் திறக்க முற்படும்போது, உன்மையான அச்சுறுத்தல் வீட்டுக்கு வெளியே தான் உள்ளது என முடிவடைகிறது. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக மக்கள் தங்களை காத்துக்கொள்ள தேவையின்றி வீட்டை விட்டு வெளியே செல்லவேண்டாம் என விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக எடுக்கப்பட்டுள்ள இந்த குறும்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.