கொரோனா வைரஸ் கண்டுபிடிப்பு ஆவணங்களை அமெரிக்காவிடம் ஒப்படைத்ததாக எழுந்த குற்றச்சாட்டை சீனாவின் வவ்வால் பெண்மணி மறுத்து உள்ளார்.
சீன மக்களில் வாழ்க்கையில் விலங்குகள் மற்றும் மாமிச சந்தைகள் முக்கியமானவை ஆனால் அது மூலம் பரவிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் கோரதாண்டவம் ஆடி வருகிறது.
சீனா கொரோனா வைரஸ் விவ்காரத்தில் உண்மையை மறைப்பதாக அமெரிக்கா குற்றம்சாட்டியது.
கொரோனா கிருமியின் மரபணுவை வரிசைப்படுத்தி, அதற்கான தீர்வை ஜனவரியிலேயே கண்டறிந்த ஆய்வாளரை சீனா மிரட்டி பணியவைத்தது.
உகானில் வவ்வால் பெண்மணி என அறியப்படும் ஷி ஜெங்லி என்ற பிரபல வைரஸ் ஆய்வாளரே கொரோனா வைரஸ் தொடர்பில் அதன் மரபணுக்களை வரிசைப்படுத்தி, தீர்வையும் வெளியிட்டவர்.இவரே சீனாவின் வவ்வால் குகைகளில் மறைந்திருக்கும் சார்ஸ் போன்ற கொடிய வைரஸ்களை அடையாளம் கண்டவர்.
அது மட்டுமின்றி, உகான் நகரில் கொரோனா பரவிய தொடக்கத்தில் பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்து மாதிரிகளை சேகரித்து அதை உறுதிப்படுத்தியும் உள்ளார்.தொடர்ந்து மூன்றே நாட்களில் அதன் மரபணுவை வரிசைப்படுத்தி, கொரோனாவுக்கான தீர்வையும் கண்டறிந்துள்ளார்.
ஆனால் சீனா நிர்வாகம் இந்த தகவலை அறிந்து, அவரை மிரட்டி தங்களுக்கு சாதகமாக அவரை பணிய வைத்துள்ளது.
ஆய்வாளர் ஷி கண்டறிந்த தகவல்களை சீனா உரிய காலத்தில் வெளிப்படுத்தியிருந்தால் கொரோனா பரவலை தடுத்திருக்க முடியும் என்பது மட்டுமின்றி, மருந்தும் கண்டுபிடிக்கப்பட்டிருக்கும்.
கொரோனாவின் மரபணு தொடர்பில் முதன் முறையாக கண்டறிந்த இவர் தற்போது அரசின் கட்டாயத்தால் அமைதி காத்து வருகிறார். இந்த நிலையில் அவரும் அவரது குடும்பத்தினரும் சீனாவிலிருந்து தப்பிச் சென்றதாகக் கூறி கடந்த 2 நாட்களாக சமூக ஊடகங்களில் வதந்திகள் பரவி வருகிறது. அது மட்டுமின்றி கொரோனா தொடர்பில் அதி முக்கிய ஆவணங்களை அவர் பாரிஸ் நகரில் அமைந்துள்ள அமெரிக்க தூதகத்தில் ஒப்படைத்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
கொரோனா தொடர்பில் முதன் முறையாக எச்சரிக்கை விடுத்த சீனாவின் வவ்வால் பெண்மணி என்ற ஆய்வாளர் தாம் நாட்டைவிட்டு வெளியேறியதாக கூறப்பட்ட தகவலுக்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.
இது குறித்து ஷி தான் நாட்டை விட்டு வெளியேறியதாக கூறப்படடும் தகவல்கள் அனைத்தும் வெறும் வதந்தியே எனவும், தாம் தவறேதும் செய்யவில்லை எனவும், சமூகவலைதளம் ஒன்றில்தெரிவித்துள்ளார். அறிவியலை மட்டுமே நம்பும் தன்னை சூழ்ந்து உள்ள சந்தேக மேக மூட்டம் மிக விரைவில் விலகும் எனவும் மீண்டும சூரிய வெளிச்சம் கிடைக்கும் எனவும் கூறி உள்ளார்.