ஊடக சுதந்திரத்தில் இலங்கை 127வது இடம்

ஊடக சுதந்திரத்தில் உலகளாவியரீதியில் இலங்கை 127 வது இடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளது.

உலக ஊடக சுதந்திரத்திற்கான தினம் நேற்று முன்தினம் மூன்றாம் திகதி அனுஷ்டிக்கப்பட்டத நிலையில் அதற்கிணங்க வெளியிடப்பட்டுள்ள சர்வதேச கணிப்பீட்டுக்கு அமைய இலங்கை127ஆவது இடத்தில் உள்ளது.

கடந்த 2019 ஆம் ஆண்டு இலங்கை ஊடக சுதந்திரத்தில் 126 ஆவது இடத்தை பெற்றுக் கொண்ட நிலையில் இந்த வருடத்தில் அதில் ஒரு வீத பின்னடைவைக்கண்டுள்ளதாக பிரான்ஸ் போட்டர்ஸ் அமைப்பு மேற்கொண்ட கணிப்பீட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது அதேவேளை சார்க் பிராந்திய நாடுகளில் இலங்கையானது ஊடக சுதந்திரத்தில் ஐந்தாவது இடத்தை பெற்றுக் கொண்டுள்ளதுடன் பூட்டான் அதில் முன்னிலை வகிக்கின்றது.

——-

Related posts