எதிர்வரும் திங்கட்கிழமையிலிருந்து யாழ்ப்பாண நகரை வழமையான செயற்பாட்டுக்கு உட்படுத்துவது தொடர்பான விசேட கூட்டம் யாழ் மாவட்ட செயலகத்தில் இன்று இடம்பெற்ற பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
கடந்த இரண்டு மாதங்களின் பின்னர் எதிர்வரும் திங்கட் கிழமையிலிருந்து யாழ் மாவட்டம் மீண்டும் வழமைக்குத் திரும்பவுள்ளது.
அனைத்து செயற்பாடுகளும் வழமைபோன்று இடம்பெறும் எனினும் சுகாதார துறையினரின் அறிவுறுத்தலுக்கு அமைய பொதுப் போக்குவரத்து, வர்த்தகர்கள் ,சிகைஅலங்கரிப்பாளர்கள் , உணவக உரிமையாளர்கள் சுகாதார திணைக்களத்தினரின் சுகாதாரநடைமுறையை பின்பற்றி பொது மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தாத வண்ணம் தமது அன்றாட செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டுமென வேண்டுகோள் விடுத்துள்ள மாவட்ட அரசாங்க அதிபர்,
யாழ் மாவட்டமானது வழமைக்குத் திரும்புகின்ற போதிலும் கொரோனா தொற்று அபாயம் இன்னும் நீங்கி விட வில்லை எனவே மக்கள் இந்த விடயத்தில் அவதானமாக செயற்பட்டு அனாவசியமாக வீடுகளிலிருந்து வெளியே வராது தேவையான விடயங்களுக்கு மட்டும் மக்கள் வெளியில் வந்து தமது தேவைகள் முடிந்த பின்னர் வீடுகளில் இருந்து தம்மைப் பாதுகாத்துக் கொள்ள முன்வர வேண்டும் எனவும் அரசாங்க அதிபர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.