இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 10 சதவிதம் கொரோனாவுக்கு எதிரான போருக்கு ஒதுக்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்தார்.
பிரதமர் மோடி இன்று நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அதன் முக்கிய அம்சங்கள் வருமாறு:-
*கோடிக்கணக்கான மக்கள் கடுமையான சூழலை சந்தித்து வருகின்றனர்.
*இது விட்டுவிடும் நேரமல்ல. இது வெற்றி பெற வேண்டிய நேரம்
*உலகின் கொள்கைகளை இந்தியா மாற்றி வருகிறது
தன்னம்பிக்கை நிறைந்த இந்தியா இன்று உலகிலேயே முக்கியத்துவம் பெற்றிருக்கிறது
*y2k பிரச்சினையை எப்படி கடந்து வந்தோமோ அதேபோல் இந்தியாவால் இதையும் வெல்ல முடியும்
*இந்த சிக்கலை தனக்கான வாய்ப்பாக இந்தியா மாற்றிக்கொண்டிருக்கிறது.
*உலகுக்கு இந்தியா வழங்கியுள்ள பெரும் பரிசு யோகா பயிற்சிகள் ஆகும்.
* உலகம் என்பது ஒரே குடும்பம் தான் என்பது இந்தியாவின் நிலை நமக்கு எப்போதும் சுயநலமில்லை.
*யாரையும் சார்ந்திராமல் தன்னம்பிக்கையுடன் இருப்போம் என 130 கோடி இந்தியர்களும் உறுதி ஏற்க வேண்டும்.
*தன்னிறைவு பெற்ற இந்தியா உருவாகும்.
*இந்திய மருந்துகள் உலகிற்கே தன்னம்பிக்கை கொடுத்து வருகிறது.
*மனித நேயம் தோற்காது களைப்பும் அடையாது.
*இந்தியாவின் வளர்ச்சியில் 5 முக்கிய அம்சங்களை கொண்டது.
* இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 10 சதவிதம் கொரோனாவுக்கு எதிரான போருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
*சிறப்பு திட்டங்கள் மூலம் ஏழை எளிய மக்கள், விவசாயிகள், நடுத்தர மக்கள் பயன்பெறுவர்.
*எல்லா துறைகளையும் கணக்கில் கொண்டு பொருளாதார சிறப்பு தொகுப்பு திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
*உள்ளூர் உற்பத்தி, விற்பனை விநியோகம் இவைகளுக்கு கூடுதல் முக்கியத்துவம் கொடுத்துள்ளோம்.
* எதிர்வரும் நாட்களில் இந்த திட்டம் பற்றி நிதியமைச்சர் விரிவாக அறிவிப்பார்.
*இந்திய அரசு கொடுக்கும் ஒவ்வொரு ரூபாயும் நேரடியாக ஏழைகளின் பைகளுக்கு செல்கிறது.
* நான்காம் கட்ட ஊரடங்குக் பற்றி மே .18-க்குள் உங்களுக்கு தெரிவிக்கப்படும்
*மேம்படுத்தப்பட்ட மற்றும் மாற்றியமைக்கப்பட்ட ஊரடங்காக நான்காம் கட்ட ஊரடங்கு இருக்கும்.
இவ்வாறு அவர் பேசினார்.